Ad Widget

துறைசார் அதிகாரிகளின் அறிவிப்பே ரூ.10 இலட்சம் சன்மானம்: மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர்

policeericpereraaயாழ். கொக்குவில் பகுதியில் கொலை செய்யப்பட்ட தென்பகுதி இளைஞனின் கொலைச் சந்தேகநபர் சம்பந்தப்பட தகவல் தருபவர்களுக்கு 10 லட்சம் சன்மானம் என்ற அறிவித்தல் கொலை தொடர்பில் விசாரணை மேற்கொள்ளும் துறைசார்ந்தவர்களினால் விடுக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் எரிக் பெரேரா இன்று தெரிவித்தார்.

யாழ். பொலிஸ் நிலையத்தில் இன்று நடைபெற்ற வாராந்த பத்திரிகையாளர் சந்திப்பின் போது ஊடகவியலாளரினால் யாழ். மாவட்டத்தில் படுகொலை செய்யப்பட்ட நபர் சார்பில் தகவல் தருபவர்களுக்கு 10 லட்சம் சன்மானம் என்ற அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும், இவ்வறிவித்தல் யாரால் விடுக்கப்பட்டுள்ளதென்றும் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த அவர், படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக புலனாய்வுதுறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவ்விடயம் குறித்து விசாரணைகள் இடம்பெறும் போது, அதனைக் கூறமுடியாது’ என்று கூறினார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய பிரதி பொலிஸ்மா அதிபர் கூறுகையில்,

வேலணை பகுதியில் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் உயிரிழந்த சிறுமியின் மரபணு மாதிரிகள் கொழும்பு தலைமை சட்ட வைத்திய அதகிக்ரியின் பரிசோதனைக்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அந்த அறிக்கை நீதிமன்றிற்கு சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் சந்தேக நபர் சார்ந்த விசாரணைகள் தீவரமாக நடைபெறும்.

இதேவேளை, யாழ். மாவட்டத்தில் கடந்த வாரத்தில் 11 திருட்டு சம்பவங்கள் இடமபெற்றுள்ளதில் 28 லட்சத்தி 83 ஆயிரத்தி 500 ருபா பணம் மற்றம் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் மூலம் தெரியவந்துள்ளது.

இந்த கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் தலைமறைவாகியுள்ளதால் அவர்களை கைது செய்ய முடியவில்லை. சந்தேக நபர்கள் தொடர்பாக புலனாய்வு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன’ என்றார்

Related Posts