Ad Widget

தீவக குளங்களின் அபிவிருத்தி நீண்டகால நோக்கை கொண்டதாக அமைய வேண்டும்: டக்ளஸ்

db2தீவகத்திலுள்ள குளங்கள் அனைத்தையும் புனரமைக்கும் நடவடிக்கையும் அழகுபடுத்தும் நடவடிக்கையும் ஒரே நேரத்தில் முன்னெடுக்கப்படுவதுடன், இத்திட்டங்கள் நீண்டகால நோக்கை கருத்தில் கொண்டதாக அமைய வேண்டும் என பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுகைத்தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் செயலகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இது தொடர்பான கலந்துரையாடலின்போதே அவர் இவ்வாறு கூறினார்.

குளங்கள் புனரமைக்கப்படும்போது எடுக்கப்படும் மண்ணைக் கொண்டு அப்பகுதிகளிலுள்ள பாரிய சேதமடைந்த வீதிகளை செப்பனிடப்படுவதற்கும் மற்றும் வெள்ளம் நிற்கும் பாதைகள், வீடுகளுக்கு பயன்படுத்தப்பட வேண்டும். மேலும் இந்த மண்ணை வெளியிடங்களுக்கு கொண்டு செல்லுவதற்கு அனுமதிக்க வேண்டாம் எனவும் அவர் கூறினார்.

அத்துடன், குளங்களை புனரமைக்கும் பணிகளின்போது பிரதேச செயலகம் மற்றும் பிரதேச சபைகளின் அனுமதி பெறப்படுவது அவசியம் ஆகும்.

நெடுந்தீவு, ஊர்காவற்துறை, வேலணை மற்றும் காரைநகர் ஆகிய பிரதேச செயலாளர்களும் மற்றும் பிரதேச சபைகளின் துறைசார்ந்தோரும் இணைந்து குளங்கள் புனரமைப்பது தொடர்பிலான அறிக்கையினை தம்மிடம் சமர்ப்பிக்குமாறும் அவர் தெரிவித்தார்.

Related Posts