தீவகப் பகுதிகளில் அதிகரித்து வரும் சமூகவிரோத செயல்கள்

யாழ். தீவகப் பகுதிகளில் சமூக விரோதச் செயற்பாடுகள் அதிகரித்து வருவதாக அப்பகுதி மக்களிடமிருந்து தொடர்ந்தும் முறைப்பாடுகள் கிடைத்து வரும் நிலையில், இது தொடர்பில் உரிய நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டியதன் அவசியம் குறித்து ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி.) யின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளார்.

மேற்படி விடயம் தொடர்பில் சட்டம் மற்றும் ஒழுங்கு விவகார அமைச்சரிடம் எடுத்துக் கூறியுள்ள அவர், தீவகப் பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை நிலையைப் பாதிக்கும் வகையில் அண்மைக்காலமாக அப்பகுதிகளில் சமூக விரோதச் செயற்பாடுகள் இடம் பெற்று வருவதாகவும், இதில் வெளி நபர்கள் ஈடுபட்டு வருவதாகவும் பொதுமக்கள் தொடர்ந்தும் எனக்கு அறிவித்து வருகின்றனர்.

இது ஆரோக்கியமான விடயமல்ல. ஏற்கனவே இப் பகுதி மிகவும் கொடூரமான ஒரு கொலைக்கு காரணமாக்கப்பட்டுள்ளது. எனவே, இவ் விடயம் தொடர்பில் அதிக அக்கறை கொண்டு உரிய செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.

Related Posts