Ad Widget

திருமலையில் விமானப் பராமரிப்பு நிலையம் அமைக்க சீனாவுக்கு அனுமதி?

Ranil_Wickramasingheதிரு­கோ­ண­ம­லையில் விமா­னப்­ப­ரா­ம­ரிப்பு நிலையம் ஒன்றை ஸ்தாபிப்­ப­தற்­கான அனு­ம­தி சீனா­வுக்கு வழங்­கப்­ப­டு­மானால் அது இலங்கை இந்­திய ஒப்­பந்­தத்தில் கூறப்­பட்­டுள்ள ஏற்­பா­டு­களை மீறு­வதும் இலங்கை மற்றும் இந்­தியா ஆகிய இரு நாடு­க­ளுக்கும் பாதிப்பை ஏற்­ப­டுத்­து­வ­தா­கவும்அமைந்து விடும் என்று எதிர்க்­கட்­சித்­த­லைவர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க நேற்று பாரா­ளு­மன்­றத்தில் எச்­ச­ரிக்கை விடுத்தார்.

இந்­தியா – இலங்கை ஆசிய நாடு­க­ளி­னது ஒரு­மைப்­பாடு ஐக்­கியம் மற்றும் பாது­காப்பு ஆகி­ய­வற்­றுக்கு பாதிப்பு ஏற்­படும் செயற்­பா­டு­க­ளுக்கு இட­ம­ளிக்­க­லா­காது என 1989இல் இந்­தி­யா­வுக்கும் இலங்­கைக்­கு­மி­டையில் ஏற்­ப­டுத்திக் கொள்­ளப்­பட்ட உடன்­ப­டிக்­கையின் போது ஏற்­ப­டுத்­தப்­பட்டு இணங்­கப்­பட்­டுள்ள ஏற்­பா­டுகள் நடை­மு­றையில் இருக்­கின்ற சந்­தர்ப்­பத்தில் அர­சாங்கம் திரு­கோ­ண­ம­லையில் சீனத்­திட்­டத்­திற்கு அனு­ம­தி­ய­ளிக்­கி­றதா என்றும் அவர் கேள்வி எழுப்­பினார்.

பாரா­ளு­மன்றம் நேற்று செவ்­வாய்க்­கி­ழமை சபா­நா­யகர் சமல் ராஜபக்ச தலை­மையில் பிற்­பகல் 1.00மணிக்கு கூடி­யது. சபையின் பிர­தான நட­வ­டிக்­கை­களின் பின்னர் பாரா­ளு­மன்ற நிலை­யியற் கட்­ட­ளையில் 23 (2) இன் கீழ் கேள்­வி­யொன்றை எழுப்­பிய போதே எதிர்க்­கட்­சித்­த­லைவர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் கூறு­கையில்

திரு­கோ­ண­ம­லையில் ஐந்து பில்­லியன் ரூபா­வுக்கும் அதி­க­மான (40 மில்­லியன் அமெ­ரிக்க டொலர்கள்) செலவில் விமான பரா­ம­ரிப்பு நிலையம் ஒன்­றினை நிர்­மா­ணிப்­ப­தற்­கென சீனாவின் தேசிய விமான தொழில்­நுட்ப இறக்­கு­மதி ஏற்­று­மதி கூட்­டுத்­தா­பனம் எனும் நிறு­வ­னத்­திற்கு அனு­மதி வழங்­கப்­பட்­டி­ருப்­ப­தாக ஜூலை மாதம் 06ஆம் திகதி வெளி­யான சண்டே டைம்ஸ் பத்­தி­ரி­கையில் செய்தி வெளி­யா­கி­யுள்­ளது.

மேலும், இலங்கை விமா­னப்­ப­டை­யிடம் இருக்கும் சீனாவின் தயா­ரிப்­பி­லான விமா­னங்கள் அனைத்தும் மேற்­படி உத்­தேச பரா­ம­ரிப்பு நிலை­யத்தில் பரா­ம­ரிக்­கப்­ப­ட­வி­ருப்­ப­தா­கவும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. மேற்­படி பத்­தி­ரி­கையில் இவ்­வா­றா­ன­தொரு செய்தி வெளி­யி­டப்­பட்­டி­ருக்­கின்ற போதிலும் அர­சாங்கம் இது தொடர்பில் எந்த கருத்­தி­னையும் தெரி­வித்­தி­ருக்­க­வில்லை.

அதே­வேளை, வெளி­வி­வ­கார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் தனது இந்­திய விஜ­யத்தின் போது இந்­திய வெளி­வி­வ­கார அமைச்சர் சுஷ்மா சுவ­ராஜை டில்­லியில் சந்­தித்த போது இவ்­வி­வ­காரம் கவ­னத்திற் கொள்­ளப்­பட்­டி­ருந்­த­தா­கவும் இது குறித்து பேசப்­பட்­ட­தா­கவும் ஊட­கங்­களில் செய்­திகள் வெளி­யா­கி­யி­ருந்­தன.

இலங்கை – இந்­தியா ஆகிய நாடு­க­ளி­னது ஐக்­கியம் ஒரு­மைப்­பாடு மற்றும் பாது­காப்பு ஆகி­ய­வற்­றுக்கு பாதிப்பு ஏற்­படும் வகை­யி­லான செயற்­பா­டு­க­ளுக்கு இரு­நா­டு­களும் தத்­த­மது நக­ரப்­பி­ர­தே­சங்­களில் அனு­மதி வழங்­கு­வ­தில்லை என்ற ரீதியில் 1987இல் ஏற்­ப­டுத்திக் கொள்­ளப்­பட்ட இலங்கை – இந்­திய ஒப்­பந்­தத்தின் ஓர் அங்­க­மாக ஏற்­றுக்­கொள்­ளப்­ப­டு­கின்­றது.

அது மாத்­தி­ர­மன்றி இந்­தி­யா­வுக்கு பாதிப்பு ஏற்­படும் வகையில் திரு­கோ­ண­ம­லையை பயன்­ப­டுத்­து­வ­தற்கு அனு­ம­தி­ய­ளிக்­கக்­கூ­டாது என்ற விட­யமும் அதில் உள்­ள­டக்­கப்­பட்­டுள்­ளது. இதனை தொடர்ந்து ஆட்­சியில் இருந்து வந்த அர­சாங்­கங்கள் உறுதி செய்து வந்­துள்­ளன.

மேற்படி சீன நிறுவனத்துடனான ஒப்பந்தம் பற்றியும் மேற்படி உடன்படிக்கை ஏற்படுத்தப்படுவதற்கு முன்னதாக இந்தியாவுடன் கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளனவா?
இரு நாடுகளினது வெளிவிவகார அமைச்சர்களுக்கும் இடையிலான சந்திப்பின் போது மேற்படி திருகோணமலை விமான பராமரிப்பு நிலைய விவகாரம் தொடர்பில் பேசப்பட்டதா? என்பது தொடர்பில் வெளிவிவகார அமைச்சில் விளக்கமளிக்க வேண்டும் என்றார்.

Related Posts