Ad Widget

தமிழ் மக்களது கலாச்சாரத்தை சீரழிக்க இடமளியோம் – யாழ். பொலிஸ் அத்தியட்சகர்

தமிழ் மக்களுடைய கலாச்சாரம் பக்தி பூர்வமானதும் மதிப்பு மிக்கதுமாகும் என்பதனை நான் நன்கறிவேன். எனவே அவற்றினை சீர்குலைக்க நாம் இடமளியோம் என யாழ். சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் டவுள்யூ.பி விமலசேன தெரிவித்தார்.

police-vimalasena

யாழ். பொலிஸ் தலைமையகத்தில் இன்று காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்

அவர் மேலும் தெரிவிக்கையில்

நான் மட்டக்களப்பில் 25 வருடங்களுக்கு மேலாக கடமையாற்றி இருக்கின்றேன். அங்குள்ள தமிழ் மக்களுடன் நான் பழகியுள்ளேன். அவர்களின் கலாச்சாரத்தை நன்கறிவேன்

அங்கு மூவின மக்களும் வாழ்கின்றனர். எனினும் அங்குள்ள தமிழ் மக்களுடைய செயற்பாடுகள் அவர்களது கலாச்சாரத்தின் மதிப்பினை எடுத்துக்காட்டுவதை நான் அவதானித்திருக்கின்றேன்.

எனவே மட்டக்களப்பில் உள்ள தமிழ் மக்கள் மட்டுமல்ல ஒட்டுமொத்தமான தமிழ் மக்களுடைய கலாச்சாரமும் மிகவும் பக்தி பூர்வமானதும் மதிப்பு மிக்கது என்பதை நான் அறிவேன்.

ஏனைய இனத்தவர்களை விட தமிழ் மக்கள் தமது கலாச்சாரத்தை பாதுகாப்பதில் மிகவும் அக்கறை காட்டுவதனையும் நான் அவதானித்துள்ளேன்.

எனவே இங்குள்ள தமிழ் மக்களது கலாச்சாரத்தை சீரழிக்கும் முகமான செயற்பாடுகளுக்கு நாம் இடமளியோம் என மேலும் தெரிவித்தார்.

Related Posts