Ad Widget

தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் இடம்பெறுவது அவசியம்: தயா மாஸ்டர்

thaya-masterநாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் 13வது திருத்தச் சட்டம் தொடர்பாகவும் ஆராயப்படவுள்ளதால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவுக்குழுவில் பங்கு கொள்வது அவசியம் என்று முன்னாள் புலிகளின் ஊடகப் பொறுப்பாளர் தயா மாஸ்டர் தெரிவித்தார்.

இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில் நியமிக்கப்பட்ட நாடாளுமன்றத் தெரிவுக் குழுவில் 13 ஆவது திருத்தத்திலுள்ள காணி பொலிஸ் அதிகாரங்கள் நீக்கப்பட வேண்டுமா? இல்லையா என்பது குறித்தும் ஆராயப்படவுள்ளதெனவும் ஊடகங்களில் செய்திகள் வெளிவந்துள்ளன.

இந்த நிலையில் நாடாளுமன்றத் தெரிவுக் குழுவில் மூத்த அரசியல்வாதியும் அரசியல் பட்டறிவுள்ள இரா.சம்பந்தன் கருத்துக்களை முன்வைப்பது அவசியமாகும்.

நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் எதிர்மறையான விளைவுகள் ஏற்பட்ட பின்னர், அது குறித்து பேசுவதால் எதுவித பயனும் ஏற்படப் போவதில்லை.

எனவே நாடாளுமன்றத் தெரிவுக் குழுவில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பங்குபற்றுவது அவசியம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Posts