Ad Widget

தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கு 2கோடி!! முன்னாள் போராளிகளோ ஒரு சைக்கிள்கூட இல்லாத நிலையில்!!

இனத்திற்காக ஆயுதம் ஏந்தி போராடியவர்கள் இன்று புனர்வாழ்வளிக்கப்பட்டு கைவிடப்பட்ட நிலையில் வாழ்ந்து வருகின்றனர் என தமிழ் விடுதலை புலிகள் கட்சியின் தலைவர் க.இன்பராசா ஆதங்கம் வெளியிட்டுள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சில உறுப்பினர்களுக்கு இரண்டு கோடி ரூபாய் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்படும் நிலையில், முன்னாள் போராளிகளோ ஒரு சைக்கிள்கூட இல்லாத நிலையில் வாழ்ந்து வருகின்றனர் என அவர் மேலும் தெரிவித்தார்.

கிளிநொச்சி வட்டக்கச்சி பகுதியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற தமிழ் தேசிய விடுதலை கூட்டமைப்பின் தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துரைத்த போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில்-

”மக்களுக்காக ஆயுதம் ஏந்தி போராடியவர்கள் கைவிடப்பட்ட நிலையில் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம். இறுதி யுத்தம் இடம்பெறும் வரையிலும் நாம் போராடிக்கொண்டடே இருந்தோம். புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டோம் என குறிப்பிடுகின்றார்கள். அங்கு என்ன நடந்தது என்று யாருக்காவது தெரியுமா? வெறும் ஐந்து மலசலகூடங்களை நூற்றுக்கணக்கானோர் பயன்படுத்தினோம். உணவு மிகவும் மோசமாக வழங்கப்பட்டது. இந்த நிலையில் நாம் எவ்வாறு அங்கு இருந்து புனர்வாழ்வளிக்கப்பட்டோம் என்று அறிவீர்களா? அதன் பின்னரும் நாம் கைவிடப்பட்ட நிலையில்தான் இருக்கின்றோம். பல முன்னாள் போராளிகள் இன்றும் அவ்வாறான இக்கட்டான நிலையிலேயே வாழ்ந்து வருகின்றனர்.

இந்த வட்டக்கச்சி மண்ணையும்கூட விடக்கூடாது என்பதற்காக இறுதிவரை போராடினோம். ஆனால் இப்பொழுது எங்கள் நிலை என்ன என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். அதனால்தான் தமிழர் விடுதலைக் கூட்டணியின் அரசியலில் களமிறங்கியுள்ளோம்” என்றார்.

Related Posts