Ad Widget

தமிழ் தேசத்தின் முடிவு 2009 இல் நடைபெறவில்லை அதன் முடிவு 2016 இல்தான் எழுதப்படுகிறது! -கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினதும் அகில இலங்கை  தமிழ் காங்கிரஸ் கட்சியினதும் வருடாந்த  பொதுக்கூட்டம் இன்று நல்லுாரில் இளங்கலைஞர் மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆற்றிய உரையிமுக்கிய பொழிப்பு வருமாறு

*தமிழ் தேசத்தின் முடிவு 2009 இல் நடைபெறவில்லை
அதன் முடிவு 2016 இல்தான் எழுதப்படுகிறது! அதுகுறித்து அக்கறைகொள்ளவேண்டும்

*எண்ணிக்கை முக்கியமில்லை எண்ணம் முக்கியம்

*2010 இல் எம்மை எதிர்த்தவர்கள் 2015 இல் எம்மை ஆதரித்தனர்

*2015 இல் என்ன சொ்ன்னோமோ அதையே 2010 இலும் சொல்லியிருந்தோம்

*எது நடக்கும் என்று சொல்லி வந்தோமோ அது நடைபெறுகின்றது.

*2015 தேர்தல் மட்டுமே தமிழரசுக்கட்சி பயத்துடன் எதிர்கொண்ட தேர்தல்

*1956 வரை தமிழரசுகட்சிகூட தேர்தல்களில் படுதோல்வியை சந்தித்தது.

*தேர்தல் மட்டும் அரசியல் இல்லை

*தமிழ்த்தேசிய அரசியலில் மாற்று அணி அவசியம் அது தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி தான்

*கலப்பு திருமணம் கூடாது என்று நான் சொ்ல்லவில்லை அதை தீர்மானிக்கும் உரிமை எங்களுக்கு இருக்கலாமே தவிர எம்விருப்புக்கு மாறாக எம்மீது திணிக்கப்படகூடாது.

*மக்கள் கொள்கையினை ஆதரித்தனர் ஆனால் வாக்களிப்பில் சலனம் கொண்டிருந்தனர்.
* நடந்தைவைகளுக்கான பொறுப்புக்கூறல் , தமிழ்தேச அங்கீகாரம் இரண்டிலும் விட்டுக்கொடுப்புக்கு இடமில்லை

*கூட்டமைப்பு இந்த விடயங்களில் இதய சுத்தியுடன் நடந்துகொள்ளுமாயின் கைகோர்க்க காத்திருக்கின்றோம்.அதை திரும்ப திரும்ப சொல்லிவந்திருக்கின்றோம்.

*தமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத்திட்த்தில் தேசம் என்ற பதம் வலியுறுத்தப்படவேண்டும்.

*தமிழ் இனம் தானாகவே தன் தேசிய அடையாளங்களை விட்டு விட்டு வருவதற்கு நிர்ப்பந்திப்பதே சிங்கள தேசிய இனத்தின் முக்கிய குறிக்கோள்.அதற்கான நடவடிக்கைகளில் எம் தலைவர்கள் என்று கூறிக்கொள்பவர்கள் பயணிக்கின்றனர்.

*சர்வதேசத்திற்கு உண்மையாக தமிழ்மக்கள் மீது ஒருபோதும் அக்கறை இருந்ததில்லை..தனது நலன்களுக்காக மட்டுமே செய்ற்படுகின்றது.

*தேர்தல் முடிந்த மறு வாரமே வாக்குறுதிகளை தொலைத்தவர்களை நம்பக்கூடாது என்பதற்காகவே தீர்வு திட்ட விடயத்திற்காக தமிழ்மக்கள் பேரவைக்கு ஆதரவு வழங்கினோம்.

*எமக்கு தேர்தலில் வாக்களிக்க தயங்கியவர்கள் கூட எமது கொள்கையில் தான் உள்ளனர். சுயாதீன சர்வதேச விசாரணையினை ஆதரிக்கின்றனர் என்பதை கையெழுத்துப்போராட்டம் நிரூபித்திருந்தது.

*இனத்தின் தனித்துவம் குறித்தோ தேச அங்கீகாரம் குறித்தோ மக்கள் மனம் மாறவில்லை அவர்கள் மாறிவிட்டார்கள் என்று காட்டுவதற்காக அரசு துடியாக துடிக்கிறது.

 

12670911_10208866039632095_6718289769145141504_n

Related Posts