Ad Widget

தமிழ் சங்கத்தின் பாரதி விழா

மகாகவி பாரதியாரின் பிறந்ததினத்தை முன்னிட்டு யாழ்ப்பாண தமிழ்சங்கத்தின் ஏற்பாட்டில் நேற்று பிற்பகல் 2 மணியளவில் யாழ் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் பாரதி விழா இடம்பெற்றது.

tamilchankam

இந் நிகழ்வுக்கு தமிழ் சங்கத்தின் உறுப்பினர் யாழ் பல்கலைக் கழகத்தின் பேராசிரியர் சின்னத்தம்பி தலைமையில் இடம்பெற்றது.

மேலும் இந் நிகழ்வில் யாழ்ப்பாண தமிழ்ச் சங்கத்துக்கான உத்தியோக பூர்வ இணையத்தளத்தினை(www.thamilsangam.org) யாழ் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் வசந்தி அரசரட்ணம் ஆரம்பித்து வைத்தார்.

நிகழ்வில் பேராசிரியர் சின்னத்தம்பி உரையாற்றுகையில்,

யாழ்ப்பாண தழிழ் சங்கமானது வெறுமனே மொழி சார்ந்ததாக இல்லாமல் பல அறிவு சார்ந்த விடயங்களையும் வெளிக்கொண்டு வரவேண்டும்.

அண்மைக் காலமாக யாழ்ப்பாணத்தின் கலாசாரம் கேள்விக்குறியாக மாறிவருகின்ற வேளை இந்தச் தழிழ் சங்கம் எமது தழிழ் மக்களை சரியான பாதையில் திசை திருப்பும் என நான் எதிர்பார்க்கிறேன் எனவும் அவர்தெரிவித்தார்.

இந் நிகழ்வில் கலை நிகழ்வுகளான இராமநாதன் நுண்கலைத்துறை மாணவர்களின் புதுமைப்பெண்கள் என்ற நாடகம் மற்றும் நல்லதோர் வீணைசெய்வோம் என்ற தொனிப் பொருளிலான பாரதியார் பாடல்களும் இடம்பெற்றன.

மேலும் இந் நிகழ்வுக்கு பேராசிரியர் வேல்நம்பி மற்றும் மாணவர்கள், நலன்விரும்பிகள் என பலரும் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி

தமிழ்ச் சங்கத்தின் பாரதி விழா

Related Posts