இரண்டு நாள் உத்தியோகபூர் விஜயம் மேற்கொண்ட அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான உதவி ராஜாங்க செயலாளர் நிஷா பிஸ்வால் இன்று புதன்கிழமை தமிழ் தேசியக் கூட்டமைப்பை சந்தித்தார்.
இந்த சந்திப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன் மற்றும் வடக்கு முதல்வர் சீ.வி.விக்னேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கொழும்பில் இன்று சுமார் ஒன்றறை மணித்தியாலங்கள் இடம்பெற்ற இந்தச் சந்திப்பின்போது ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தால் செப்டெம்பர் மாதம் வெளியிடப்படவுள்ள இலங்கைக்கு எதிரான போர்க்குற்ற விசாரணை அறிக்கை மற்றும் புதிய அரசு தொடர்பான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு, தமிழ் மக்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வு உள்ளிட்ட முக்கிய பல விடயங்கள் தொடர்பாக ஆராயப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.