தமிழீழ விடுதலை புலிகளின் எழுச்சி பாடல்களுடன் யாழில் மே தினப் பேரணி!

தமிழீழ விடுதலை புலிகளின் எழுச்சி பாடல்களின் ஒலிகளுக்கு மத்தியில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மே தினப் பேரணி யாழில் இடம்பெற்றது.

நேற்று (செவ்வாய்க்கிழமை) பிற்பகல் நெல்லியடி புதிய சந்தைப் பகுதியில் ஆரம்பமான இப்பேரணி, மைக்கல் விளையாட்டு மைதானம் வரை சென்றடைந்தது.

இதன்போது, தமிழரின் உரிமைகள், தமிழ் மக்களின் கோரிக்கைகள் மற்றும் தொழிலாளர் உரிமைகள் தொடர்பில் வாகன ஊர்திகளும் பேரணியில் பங்கேற்றன.

குறித்த பேரணியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான சுமந்திரன், யாழ்ப்பாண மாநகர சபை முதல்வர் ஆர்னொல்ட், மாகாண சபை உறுப்பினர்கள், நகர மற்றும் பிரதேச சபைகளின் தலைவர்கள், உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர்கள், பங்காளிக் கட்சிகளின் உறுப்பினர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் பொது மக்கள் என பெரும் திரளானோர் பேரணியில் பங்கேற்றனர்.

Related Posts