Ad Widget

தமிழரசுக் கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்க விடோம்! பங்காளிக் கட்சிகள் அனைத்துக்கும் சம அந்தஸ்து அவசியம்!!

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு பெரும்பான்மை வழங்கப்படுவதை ஏற்றுக் கொள்ள மாட்டோம். அங்கம் வகிக்கும் அனைத்துக் கட்சிகளுக்கும் சம அந்தஸ்து வழங்கப்பட வேண்டும்.” – இவ்வாறு தெரிவித்திருக்கிறார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன்.

SURESH_PREMACHANDR

கொழும்பில் வரும் வெள்ளி, சனிக்கிழமைகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்கு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளது.

இந்த ஒப்பந்தத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு 51 வீதமும் ஏனைய கட்சிகளுக்கு 49 வீதமும் வழங்கப்படும் என அக்கட்சியின் தலைமை அலுவலகமான யாழ்ப்பாணக் கிளை தெரிவித்தது.

இது குறித்து சுரேஷ் எம்.பி. கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் தெரிவித்த விடயங்கள் வருமாறு:

“புரிந்துணர்வு ஒப்பந்தம் தொடர்பில் மாவட்டக் கிளைகளின் கருத்துக்கள் குறித்து நாம் கவலைப்படவில்லை. புரிந்துணர்வு ஒப்பந்தம் வரும் வெள்ளி, சனிக்கிழமைகளில் இடம்பெறவுள்ளது.

இதன்போது இடம்பெறும் பேச்சில் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்பார்கள். இதில் எடுக்கப்படும் தீர்மானங்களே முக்கியத்துவமுடையவை. தீர்மானங்கள் எடுக்கப்படும்போது ஒரு கட்சிக்கு மாத்திரம் பெரும்பான்மை கிடைப்பதை நாம் ஏற்றுக் கொள்ள மாட்டோம். அனைத்துக் கட்சிகளுக்கும் சம அந்தஸ்து கிடைப்பதையே நாம் விரும்புகிறோம்.” -என்றார்.

Related Posts