Ad Widget

தபால் மூல வாக்களிப்பிற்கான விண்ணப்பங்களை மாவட்ட தேர்தல் அலுவலகங்களில் கையளிக்க நடவடிக்கை

பாராளுமன்றத் தேர்தலில் தபால் மூலம் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளவர்களுக்காக கடந்த மார்ச் மாதம் 17 ஆம் திகதி வெளியிடப்பட்ட அறிவித்தல்களுக்கு அமைய ஏற்கனவே தபால் மா அதிபருக்கு கிடைக்கப் பெற்றுள்ள தபால் மூல வாக்களிப்பிற்கான விண்ணக்கங்களை இம் மாதம் 27 ஆம் திகதி மாவட்ட தேர்தல் அலுவலகங்களுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தபால் மூல வாக்களிப்பிற்கான விண்ணப்பங்களுக்கான இறுதி தினம் மார்ச் மாதம் 17 ஆம் திகதியாகவே முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்கமைய மார்ச் 17 ஆம் திகதி வரை அந்தந்த அத்தாட்சி அலுவலர்களுக்கு கிடைக்கப் பெற்றிருந்த அனைத்து விண்ணப்பங்களையும் இம் மாதம் 28 ஆம் திகதி மாலை 4 மணிக்கு முன்னர் அல்லது அதற்கு முன்னர் குறித்த அலுவலகம் அல்லது அரச நிறுவனம் அமைந்துள்ள மாவட்டத்தின் மாவட்ட செயலகம் , மாவட்ட தேர்தல் அலுவலகம் , அல்லது கொழும்பிலுள்ள தேர்தல் செயலகத்திற்கு முகப்பு கடிதத்துடன் நேரில் சென்று கையளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவித்தலை தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்கள் கோரும் புதிய அறிவித்தலொன்றாகவோ அல்லது விண்ணப்பங்களை கையேற்கும் புதிய தினமொன்றை அறிவிப்பதாகவோ கருதக் கூடாது.

Related Posts