Ad Widget

தபாலில் பெறுமதி மிக்க பொருட்களை அனுப்புவோரே கவனம்!

வௌிநாட்டில் இருந்து அனுப்பப்பட்ட பொதிகளில் பொருட்களுக்கு பதிலாக பத்திரிகைகள் மற்றும் கொங்ரீட் கற்களை நிரப்பி மோசடி செய்த தபால் ஊழியர்கள் நால்வர் உள்ளிட்ட எட்டுப் பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

parsal-post

கடந்த மே மாதம் மூன்றாம் திகதி துபாயில் இருந்து அனுப்பப்பட்ட மூன்று பொதிகள் உரிமையாளர்களால் எடுத்துச் செல்லப்படாமை தொடர்பில் கோட்டை மத்திய தபால் பரிவர்தனை நிலையத்தில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.

இதனையடுத்து குறித்த பொதிகள் சோதனையிடப்பட்ட போது, அதில் பத்திரிகைகள் மற்றும் கொங்ரீட் கற்களும் இருந்ததாக கோட்டையிலுள்ள மத்திய தபால் பரிவர்தனை நிலைய வெளிநாட்டு தபால் பிரிவு அதிகாரி ஜே.எச்.எம்.சமரசிங்கவினால் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதன்படி மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் எட்டுப்பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதில் தபால் பொறுப்பதிகாரி, பார்சல் பிரிவின் பொறுப்பதிகாரி, அலுவலக உதவியாளர் ஆகியோர் உள்ளிட்ட நான்கு தபால் உத்தியோகத்தர்களும் அடங்குவதாக தெரியவந்துள்ளது.

இவர்களால் இவ்வாறான மோசடி நடவடிக்கையில் ஈடுபட ஒரு இலட்சத்து பத்தாயிரம் ரூபாய் இலஞ்சம் பெறப்பட்டுள்ளது.

மேலும் குறித்த பொதிகளில் இருந்து எடுக்கப்பட்டு, சந்தேகநபர்களால் புறக்கோட்டை வர்த்தக நிலையத்தில் விற்கப்பட்ட 173 கையடக்கத் தொலைபேசிகளும் நான்கு கனணிகளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

சந்தேகநபர்களை இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Related Posts