Ad Widget

தனியார் துறையின் சம்பளம் 15- 35 வீதத்தால் அதிகரிப்பு

தனியார் துறைகளின் சம்பளத்தை 15 -35 சதவீதமாக அதிகரிக்க சம்பள நிர்ணய சபை இணக்கம் தெரிவித்துள்ளது. சம்பள நிர்ணய சபை , தொழிற்சங்கங்கள் என்பவற்றுடன் நடத்தப்பட்ட கலந்துரையாடலின் பின்னரே இத்தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக அமைச்சரவையின் பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

rajeetha-sena-ratna

நேற்று (19) அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை தெரிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதற்கமைய ஊழியர்களின் அடிப்படை சம்பளம் 10,000 ரூபாவாகவும் ஏனைய நிறுவனங்களின் வருமானத்திற்கமைய அவர்களின் சம்பளம் 15 – 35 வீதமாக அதிகரிக்கப்படவுள்ளது. அத்துடன் சம்பள நிர்ணய சபையின் கீழ் வராத ஹோட்டல்கள் கடைகள் உட்பட அனைத்து தளங்களுக்கும் சம்பளம் 15 சதவீதத்தினால் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts