Ad Widget

தனிநாட்டு கோரிக்கை தமிழர்களுக்கு தீர்வாக அமையாது: சி.க.சிற்றம்பலம்

tnaதமிழர்களுக்கான தீர்வு சமஷ்டி ஆட்சியின் மூலம் கிடைக்குமே தவிர தனிநாட்டுக் கோரிக்கை தமிழர்களுக்கு தீர்வாக அமையாது’ என தமிழரசு கட்சியின் சிரேஷ்ட உபதலைவர் சி.க.சிற்றம்பலம் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

’13ஆவது திருத்தத்தினை தமிழ் தேசிய கூட்டமைப்பு கையில் எடுத்து வைத்துக் கொண்டு மாகாண சபை அதிகாரம் குறித்து பேசுவது தமிழ் மக்களுக்கு பயனில்லாத ஒன்று. அத்துடன், அது ஆரோக்கியமற்றதுமாகும்.

மாகாண சபை அதிகாரங்கள் வெறுமனே இருக்கின்ற பொழுது மாகாண சபை தேர்தலில் போட்டியிட தமிழ் தேசிய கூட்டமைப்பு முனைந்திருக்கின்றது.

யுத்தம் முடிந்த 4 வருடங்களில் தமிழ் தேசிய கூட்டமைப்பில் இணைந்த 5 கட்சிகளும் தமிழர்களின் தீர்வு இதுதான் என ஏன் கூறவில்லை? ஏன் அதற்கான தீர்வினை முன்வைக்கவில்லை?.

5 கட்சிகளும் இணைந்து தமிழ் மக்களின் பிரச்சனைகளை எவ்வாறு முன்னெடுத்து செல்வது என்பதை சிந்திக்க வேண்டும். மத்திய செயற்குழுவிற்கு அப்பால், நாடாளுமன்ற குழு முக்கிய அங்கம் வகிக்கின்ற காரணத்தினால்தான் இவ்வாறான தீர்மானங்கள் எடுக்கப்படுகின்றன.

அதன்போது, வடக்கு மாகாண சபை தேர்தலில் யாரை நிறுத்துவதென மத்திய செயற்குழு கூட்டத்தில் தீர்மானிக்க வேண்டும் என தமிழரசு கட்சியின் மூத்த உறுப்பினர் சிற்றம்பலம் மேலும் கூறினார்.

Related Posts