Ad Widget

தனது விடுதலைக்காக அசாத் சாலி ஜனாதிபதிக்கு அளித்த சத்திய வாக்குறுதி

Asathsaliகொழும்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் அசாத் சாலி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு அனுப்பிய சத்திய வாக்குறுதி ஜனாதிபதியால் பரிசீலிக்கப்பட்ட பின்னரே நேற்று நிபந்தனை அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

ஜனாதிபதிக்கு அசாத் சாலி நேற்று முன்தினம் அனுப்பியதாகக் கூறப்படும் அந்த சத்திய வாக்குறுதியில் கீழ்காணும் விடயங்கள் அடங்குகின்றன.

இந்தியாவின் சஞ்சிகைக்கு தான் வழங்கிய செவ்வி திரிபுபடுத்தப்பட்டு பிரசுரமானதாகவும் தான் அதுகுறித்து சஞ்சிகை அதிகாரிகளுடன் உரையாடி கருத்தை சரிசெய்து மீண்டும் பிரசுரிக்க நடவடிக்கை எடுத்ததாகவும் அசாத் சாலி தெரிவித்துள்ளார்.

இலங்கை முஸ்லிம் பிரஜை என்ற வகையில் ஒருபோதும் இலங்கை அரசுக்கு எதிராக ஆயுதம் தாங்கவோ அதற்கு ஒத்துழைப்பு வழங்கவோ மாட்டேன் என வாக்குறுதி அளித்துள்ள அசாத் சாலி அவ்வாறான நிலையை மூன்று தசாப்தங்கள் நிலவிய யுத்தத்தின் மூலம் கண்டுகொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் ஒருமைப்பாடு, சுயநிர்ணயம் மற்றும் அனைத்து மக்களுக்காகவும் முன்னின்றதாகவும் எதிர்காலத்திலும் அவ்வாறு செயற்படுவேன் எனவும் அசாத் சாலி கூறியுள்ளார்.

இந்திய ஊடகத்திற்கு தான் அளித்த பேட்டியால் யாரும் ஏமாற்றப்பட்டிருந்தால் அல்லது அசௌகரியத்திற்கு உட்பட்டிருந்தால் அதற்கு தனது கவலையை வெளியிடுவதாகவும் அசாத் சாலி தெரிவித்துள்ளார்.

´பொப்புயூலர் பிரன்ட் ஒப் இந்தியா´ என்ற அமைப்பின் மாநாட்டிற்கு தான் முதல் முறையாக சென்றிருந்ததாகவும் அந்த அமைப்பின் நோக்கம் மற்றும் செயற்பாடுகள் குறித்து அறிந்திருக்கவில்லை எனவும் அசாத் சாலி சத்திய வாக்குறுதி அளித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி

அசாத் சாலி விடுதலை செய்யப்பட்டார்!

Related Posts