மீசாலைப் பகுதியில் தந்தையின் வாள் வெட்டுக்கு இலக்காகி மகள் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்று இடம்பெற்ற இச் சம்பவத்தில் கோடீஸ்வரன் தர்மிகா என்ற 22 வயதான நபரே வாள் வெட்டுக்கு இலக்காகி சாவகச்சேரி வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேற்படி இச் சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது தாய்க்கும் தந்தைக்கும் இடையில் இடம்பெற்ற சண்டையை மகள் விலக்கச் சென்ற வேளை தந்தை மகளை வாளால் வெட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.