Ad Widget

தஞ்சக்கோரிக்கையாளர் மரணம்: சிகிச்சையில் குறையில்லை என்கிறது ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் தஞ்சம் கோரியிருந்த இரானியர் ஒருவர் மூளைச்சாவு அடைந்துள்ளதை அடுத்து, அவருக்கு உரிய மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்படவில்லை என்று எழுந்துள்ள குற்றச்சாட்டுகளை ஆஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் ஸ்கொட் மொரிசன் நிராகரித்துள்ளார்.

aus-iraneya_hamid-manus

இதயத் துடிப்பு போன்ற விஷயங்கள் மருத்துவ உபகரணங்கள் கொண்டு இயங்க மூளை இயங்காமல் போய்விடுவது மூளைச் சாவு ஆகும்.

ஹமீத் கசாயி என்ற அந்த நபருக்கு வழங்கப்பட்டிருந்த சிகிச்சை பற்றி மீளாய்வு செய்யும்படி தனது தலைமை மருத்துவ அதிகாரியிடம் மாரிசன் பணித்துள்ளார்.

பப்புவா நியூகினீயில் உள்ள மனுஸ் தீவில் இருக்கும் ஆஸ்திரேலிய தஞ்சக்கோரிக்கையாளர் பரிசீலனை மையத்தில் சென்ற மாதம் இவருக்கு காலில் சிறிய வெட்டுக்காயம் ஏற்பட்டிருந்தது.

அந்த வெட்டுக்காயத்தில் கிருமித்தொற்று ஏற்பட்டு, புண்கள் உருவாகி, அதனால் அவருக்கு பின்னர் மாரடைப்பு ஏற்பட்டதாக செய்திகள் கூறுகின்றன.

கசாயிக்கு பொருத்தப்பட்டுள்ள சுவாசக் கருவியை நிறுத்தி அவரது உயிர் பிரிய விடுவதற்கு அவரது குடும்பத்தார் தற்போது சம்மதித்துள்ளனர் என்று பிபிசிக்கு தெரியவந்துள்ளது.

கசாயியின் உடலுறுப்புகளை ஆஸ்திரேலியாவில் தானமாக வழங்க அவரது குடும்பத்தார் விரும்புகின்றனர்.

ஆனால் செப்டிசீமியா நோய் வந்திருந்தபடியால் கசாயியின் உறுப்புகள் மற்றவருக்கு பயன்படாது என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

Related Posts