Ad Widget

தங்கம்மா அப்பாக்குட்டியின் 88ஆவது பிறந்த தின அறக்கொடை விழா

thankamaammakkuddiசிவத்தமிழ்ச் செல்வி கலாநிதி தங்கம்மா அப்பாக்குட்டியின் 88ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு அறக்கொடை விழா இன்று தெல்லிப்பளை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான மண்டபத்தில் தெல்லிப்பளை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான தலைவர் செஞ்சொற் செல்வர் ஆறு.திருமுருகன் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் யாழ். போதான வைத்தியசாலை சிவாலயத்திற்கு ஒரு லட்சம் ரூபாயில் சிவத்தமிழ்ச் செல்வி அறக்கொடை நிதியாக வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்நிகழ்வில் தெல்லிப்பளை ஆதர வைத்தியசாலை பெண்கள் பிரிவுக்கும் நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது.

வலிகாமம் கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளில் க.பொ.த சாதாரணத்தில் கல்வியில் சிறந்தும் வறுமையின் பிடியிலும் இருந்து கல்வி பயிலும் 200 மாணவர்களுக்கும் சிவத்தமிழ்ச் செல்வி கல்வி நிதியம் வழங்கப்பட்டது.

மல்லாகம் செல்வி அப்பாக்குட்டி கனிஸ்ட வித்தியாலயம், காங்கேசன் துறை நடேஸ்வரா கல்லுரி, தெல்லிப்பளை சைவபிரகாச வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளுக்கு தெல்லிப்பளையிலிருந்து இளைஞர் சங்கத்தினால் 10 ஆயிரம் ரூபா பெறுமதியான கல்வி உபகரணங்களும் கையளிக்கப்பட்டன.

மேலும் சிரேஸ்ட வைத்திய கலாநிதி திருமதி ஜெ.கணேசமூர்த்தி, சிவமயச் செல்வி ஸ்ரீ விசுவாம்மா விசாலாட்சி அம்மையார், துர்க்காதேவி தேவஸ்தான முன்னால் உபதலைவர் நடராசா செல்வநாயகம், பாரம்பரிய வில்லிசைக் கலைஞர் கலாபூசனம் நா.கணபதிப்பிள்ளை (சின்னமணி), விவேகானந்த சபை முன்னாள் செயலாளர் சி.கந்தசாமி ஆகியோர் 2013ஆம் ஆண்டிற்கான சிவத்தமிழ் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

யாழ். மேல் நீதிமன்ற ஆணையாளர் ஜே.விஸ்வநாதன் இந்நிகழ்வின் பிரதமவிருந்தினராக கலந்து கொண்டார். மேலும் இந்நிகழ்வில் அமெரிக்கா வாழ் ஆன்மீக சுடர்ரிஷி தொண்டுநாதன், யாழ். போதான வைத்தியசாலை பணிப்பாளர் வைத்திய கலாநிதி எஸ்.ஸ்ரீ பவானந்தராஜா, தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலை அத்தியட்சகர், வைத்திய கலாநிதி எம்.உமாசங்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related Posts