Ad Widget

‘டெனிஸ்வரனை நீக்கிவிட்டேன்’ : முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்

“வடமாகாணப் போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரனை அமைச்சுப் பதவியிலிருந்து நீக்கிவிட்டேன்” என, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், தமிழீழ விடுதலை இயக்கத்தின் (டெலோ) செயலாளர் நாயகம் ந.ஸ்ரீகாந்தாவுக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.

நேற்று (22) அனுப்பிய கடிதத்திலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டிருந்ததாவது, “டெலோ விடுத்த கோரிக்கைக் கேற்ப விந்தன் கனகரத்தினத்தை உள்ளடக்க முடியாது எனவும் அவரை தனது அமைச்சுடன் இணைந்து செயற்படுமாறும் விக்னேஸ்வரன் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

Related Posts