டெங்கு ஒழிப்பு வாரத்தினை முன்னிட்டு பராமரிக்கப்படாத காணிகள் மாநகர சபையினால் துப்புரவாக்கப்படுகின்றன

தேசிய ரீதியாக டெங்கு ஒழிப்பு வாரம் செப்ரெம்பர் 10 தெடக்கம் 15 வரை கடைப்பிடிக்கப்படுகின்றது. இதன்போது ஒவ்வொரு நாளும் வேறுவேறு நிறுவனங்களில் சிரமதானப் பணிகள் நடைபெற திட்டமிடப்பட்டு, அமுல்ப்படுத்தப்பட்டு வருகின்றது.

15218638011_6d54836c74

யாழ்ப்பாணத்திலுள்ள உரிமையாளர்களால் பராமரிக்கப்படாத காணிகள் மற்றும் வீடுகளை யாழ் மாநகர சபையினால் துப்புரவாக்குமாறு வட மாகாண ஆளுநர் ஜிஏ.சந்திரசிறி அவர்களினால் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. அதனையடுத்து மாநகரசபை ஊழியர்கள் குறித்த காணிகளை துப்புரவு செய்து வருகின்றார்கள்.

Related Posts