Ad Widget

“டில்லு” குழுஐவைச் சேர்ந்த நான்கு தென்னிலங்கை நபர்கள் கைது

arrest_1யாழில் கைது செய்யப்பட்ட “டில்லு” குழுவுடன் சேர்ந்து இயங்கிய தென்னிலங்கையை சேர்ந்த நால்வர் நேற்றைய தினம் வட்டுக்கோட்டை பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட நான்கு பேரும் தென்னிலங்கையை சேர்ந்தவர்கள் என்றும் அவர்களில் ஒருவர் விமானப்படையில் இருந்து விலகியவர் எனவும் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஜா-எல பகுதியை சேர்ந்த இருவரும் கொட்டாவப் பகுதியை சேர்ந்த ஒருவரும் அங்கொடையை சேர்ந்த ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த சனிக்கிழமை டில்லு குழு என்னும் 9 பேரை கொண்ட குழுவொன்றை கொக்குவில் தலையாளி பகுதியில் பதுங்கியிருந்த போது பொலிசார் கைது செய்திருந்தனர்.

அவர்களிடம் இருந்து இரண்டு இராணுவ சீருடை உட்பட வாள்கள் கத்திகள் என்பன கைப்பற்றப்பட்டிருந்தன.

அவர்கள் அனைவரும் மறுநாள் மல்லாகம் நீதவான் முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டு நால்வர் சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டதுடன் ஏனைய ஐவரையும் 18ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந் நிலையில் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டு வந்த பொலிசார் டில்லு குழு கைது செய்யப்பட்ட கொக்குவில் தலையாளி பகுதியில் வைத்தே இந்த நான்கு பேரையும் நேற்றைய தினம் கைது செய்தனர்.

இவர்கள் நால்வரும் தொடர்ந்து பொலிஸ் காவலில் வைத்து விசாரிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கபடுகின்றது.

தொடர்புடைய செய்தி

கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய “டில்லு குழு கைது

Related Posts