Ad Widget

டிரான்பேரன்ஸி இன்டர்நெஷனல் நிறுவனம் தேர்தல் ஆணையாளரிடம் முறைப்பாடு

Transparency-International-logoமாகாண சபைத் தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக வேட்பாளர்கள் சிலர், அரசியல் கட்சிகள் அரச சொத்துக்களை தவறான வகையில் தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் பயன்படுத்துவது தொடர்பில் தமக்கு 40க்கு மேற்பட்ட முறைப்பாடுகள் கடந்த 29 ம் திகதிக்கு முன்னர் கிடைத்துள்ளதாகவும் இது தொடர்பில் தேர்தல்கள் ஆணையாளரிடம் முறையிட்டதாகவும் டிரான்பேரன்ஸி இன்டர்நெஷனல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இம்முறைப்பாடுகள் தொடர்பில் தமது கண்காணிப்பாளர்கள் உறுதி செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

இவர்களது முறைப்பாட்டில் வடமாகாணத்தை பொறுத்தவரையில் குறிப்பிட்டிருப்பதாவது

கிளிநொச்சி மாவட்டத்தில் கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 35 கிராம அலுவலர்களை ”சோலைவானம்” விடுதியிற்க்கு அழைத்து பாரளுமன்ற உறுப்பினர் எம்.சந்திரகுமார் அவர்கள் மதிய போசனம் வழங்கி ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் வேட்பாளர்களுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுள்ளார். இக் கூட்டம் 17-08-2013 புதன்கிழமை மதியம் 12 மணி முதல் மாலை 3 மணி வரை நாடாத்தப்பட்டுள்ளது. இந் நாளில் மக்களை பிரதேச செயலகத்தில் வைத்து கிராம சேவகர்கள் சந்திக்கும் வேலை நாள் என்பதுவும் குறிப்பிடத்தக்கது.

இது தவிர ஏனைய மாகாண முறைப்பாடுகளும் குறிப்பிடப்பட்டுள்ளதோடு தொடர்ந்தும் தேர்தல் முறைகேடுகள் தொடர்பில் கண்காணித்துவருவதாகவும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் அந்த முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தமது அரசபணி கடித உறைகளை தேர்தல் பிரச்சாரத்திற்காக பயன்படுத்தியதாக அரச முதன்மை வேட்பாளர் தவராசா குற்றஞ்சாட்டிருந்தன்பேரில் இது தொடர்பிலும் டிரான்பேரன்ஸி இன்டர்நெஷனல் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரியவருகின்றது.

Related Posts