Ad Widget

ஜப்பானில் அணுமின் நிலையம் ஒன்று மீண்டும் இயங்க ஒப்புதல்

ஜப்பானில் அணுமின் நிலையம் ஒன்று மீண்டும் செயல்படாட்டை ஆரம்பிப்பதற்கு வட்டார அரசாங்கம் ஒன்று அனுமதி அளித்துள்ளது.

japan

நாட்டில் அணுசக்தி மின் உற்பத்தி தொழில்துறைக்கு புத்துயிர் ஊட்ட வேண்டும் என்ற மத்திய அரசாங்கத்தின் நம்பிக்கைக்கு ஊக்கம் அளிக்கும் ஒரு முன்னேற்றமாக இது பார்க்கப்படுகிறது.

செண்டாய் அணுமின் நிலையத்தின் இரண்டு உலைகளை செயல்படுத்துவது சம்பந்தமான பிரேரணை ஒன்றுக்கு ககோஷிமாவின் தெற்கு பிராந்திய ஆட்சி மன்றமும் ஆளுநரும் ஒப்புதல் வழங்கியுள்ளனர்.

2011ல் நிலநடுக்கத்தாலும் சுனாமியாலும் ஃபுகுஷிமா அணுமின் நிலையத்தில் ஏற்பட்ட விபத்தை அடுத்து ஜப்பானில் கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதால் ஜப்பானின் அணுமின் நிலையங்கள் அனைத்தும் அனைத்தும் தற்போது நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.

அணுமின் நிலையங்களின் செயல்பாடு மீண்டும் ஆரம்பிக்கப்படுவதற்கு ஜப்பானியர்கள் பலர் இன்னும் எதிர்ப்பாகவே உள்ளனர்.

Related Posts