ஜனாதிபதி வருகையை முன்னிட்டு வடக்கில் பொலிஸார் பதிவு நடவடிக்கை!

வடக்குக்கு இரண்டு நாள் பயணமாக எதிர்வரும் 12ஆம், 13ஆம் திகதிகளில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ வருகிறார்.

Sl_police_flag

ஜனாதிபதியின் வருகையை ஒட்டி ஏற்கனவே வலி.வடக்கு பகுதிகளில் வீட்டு வேலிகள் இராணுவத்தினரால் அற்றப்பட்டுள்ளன.

இந்த நிலையில் தற்போது பரவலாக பொலிஸார் ஆட்பதிவு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

சிவில் உடையில் வீடுகள், கடைகள், நிறுவனங்களுக்கு செல்லும் பொலிஸார் அங்குள்ளவர்களது விபரங்களை பெற்று வருகின்றனர்.

முன்னறிவிப்பற்ற இந்த செயற்பாடுகள் காரணமாக மக்கள் அச்சமடைத்துள்ளனர். எனினும் ஜனாதிபதியின் வருகையை ஒட்டி பாதுகாப்பு காரணங்களுக்காகவே தாம் பதிவு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related Posts