Ad Widget

ஜனாதிபதி தனது பதவியை துறப்பதே பேருதவி: சுரேஸ் எம்.பி

SURESHஊடகங்களின் மீது தாக்குதல் மேற்கொள்பவர்கள் ஒருவரை கூட கைதுசெய்ய நடவடிக்கை எடுக்க முடியாத ஜனாதிபதி நிச்சயமாக தனது பதவியை துறப்பதுதான் நாட்டு மக்களுக்கு செய்யும் பேருதவி என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்தார்.

யாழ். ஊடக அமையத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போது அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில், இன்று உதயன் பத்திரிகை மீண்டும் ஒரு முறை தாக்குதலுக்குள்ளாக்கப்பட்டுள்ளது. தானியங்கி துப்பாக்கியுடன் வந்தவர்கள் 3க்கு மேற்பட்டவர்களினால் எச்சரிக்கை வேட்டுகளை தீர்த்து, அங்கு வேலை செய்யக்கூடிய ஊழியர்களை விரட்டி, மிகவும் மோசமாக நடந்து கொள்கின்றார்கள். இது வெறுமனவே யாழ்ப்பாணத்தில் உதயன் பத்திரிகை தாக்கியது மாத்திரமின்றி யாழ். மாவட்டத்தில் மட்டுமன்றி வடமாகாணத்தில் ஜனநாயகத்தின் குரல் வளையை நெரிக்கிற வேலைத்திட்டத்தை அரசாங்கம் செய்கின்றதாகவே தான் நாங்கள் கருதுகின்றோம். அரச பயங்கரமான வேலைத்திட்டமாக தான் நாங்கள் கருதுகின்றோம் என கூறினார்.

அத்துடன், இது சாதாரணமான நடவடிக்கையாகவும் எமக்கு தோன்றவில்லை. புலிகளை பயங்கரவாதிகள் என்று சொல்லக்கூடியவர்கள், தாம் மிகவும் பொரிய ஜனநாயகவாதிகள் என்று சொல்ல கூடியவர்கள், இன்று புலிகளை பயங்கரவாதிகள் என்று சொல்லுவதற்கான எந்த யோக்கியதையற்றவர்களான ஒரு சூழ்நிலைக்கு தான் இந்த அரசாங்கம் தள்ளப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில், அல்லது வடக்கு மாகாணத்தில் ஜனநாயகத்திற்கு மூடுவிழா செய்யப்பட்டுள்ளது.

ஜனநாயகத்தினை காப்பாற்ற முடியாத, அல்லது தொடர்ச்சியாக ஏற்பட்டு வரக்கூடிய இவ்வாறான பத்திரிகை மீதான ஊடக துறை மீதான தாக்குதலை நிறுத்தமுடியாத இன்று வரை வடக்கிலும், சரி தெற்கிலும் சரி ஊடகதுதறை மீதான தாக்குதலில் பல பேர் கொள்ளப்பட்டும், மிகவும் மோசமான நடவடிக்கையினை மேற்கொண்டவர்களை கைதுசெய்ய முடியாத ஜனாதிபதி நிச்சயமாக தனது பதவியை துறப்பதுதான் இந்த நாட்டு மக்களுக்கு செய்யக் கூடிய பேருதவியாக இருக்கும் என்றார். அவர் எந்த விதத்திலும் ஜனாதிபதியாக இருப்பதற்கு தகுதியை இழந்துவிட்டதாக தான் நாங்கள் கருதுகின்றோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஏனென்றால் மக்களின் வாக்குறுரிமை மூலம் ஜனாதிபதியாக வந்த ஒருவர் இந்த நாட்டில் முழுமையான ஜனநாயத்தினை பொதுமக்கள் வாய்மூடி மௌனிக்க கூடியவர்களாக இருக்கின்றார்கள் அதுமட்டுமன்றி அரசியல் வாதிகள் கைதுசெய்யப்படுகின்றார்கள். கற்கள் விட்டு அடிக்கப்படுகின்றது. பாதுகாக்கக்கூடிய ஒருவர் மிக மிக வன்மையாக கண்டிக்க வேண்டிய ஒரு விடயம். அதற்கு மேலும் சர்வதேசம் பொருமையாக இருக்குமாயின் இலங்கையில் ஜனநாயகம் குழி தோண்டிப் புதைக்கப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. அதில் முக்கியமாக தமிழர் பகுதிகளில் ஜனநாயகம் குழி தோண்டிப் புதைக்கப்படும் ஒரு சூழல் நிலவுகின்றதென்பதை மிக தெளிவாக குறிப்பிட வேண்டும் என அவர் கூறினார்.

ஆகவே, இந்த கால கட்டம் என்பது ஒரு வகையில் வடக்கு மாகாண சபை தேர்தல் நடக்கும் என்ற ஒரு கதை அடிபடும் நேரத்தில் தேர்தலுக்கு அரசாங்கம் இராணுவத்தினுடாக பல்வேறுபட்ட வேலைகளை செய்யும் இந்த காலத்தில், வடமாகாண சபை தேர்தலில் தான் வெல்வதற்காக இராணுவத்தினரை முற்று முழுதாகாக களத்தில் இருக்க கூடிய சூழ்நிலையில், தமிழ் மக்களுடைய பத்திரிகைகளாக இருக்ககூடியவை எரிக்கப்படுவதும், தாக்கப்படுவதும் இல்லாமை செய்யப்படுவதும் நிச்சயமாக கண்டிக்க தக்கது மாத்திரமல்ல தேர்தல் எவ்வாறு ஒழுங்காக ஜனநாயக முறையில் நடைபெறும் என்பதனையும் நாம் நினைத்துப் பார்க்க முடியும்.

ஆகவே, ஒரு ஜனநாயகத்தின் தூண்களாக கருதக்கூடிய பத்திரிகைகளுக்கு வாய்ப்பூட்டுக்களை போட்டு பத்திரிகைகளை எரித்து, ஊடக துறையை இல்லாமல் செய்து, தேர்தலுக்கு போவது என்பதும், இவ்வாறான முட்டாள்தனங்கள் நிச்சயமாக இருக்க முடியாது. சர்வதேசம் இதனைப் பார்த்துக் கொண்டு இருக்க கூடாதென்றும், ஆகவே இதற்கான நடவடிக்கைகளை அவர்கள் எடுக்க முடியாதென்பதனையும் ஏற்றுக் கொண்டிருக்க முடியாததென்பதனையும் உடனடி நடவடிக்கைகளையும் அவர்கள் எடுக்க வேண்டும் என்பதுடன், சர்வதேச சமூகம்முன்னர் மாதிரி வெறும் கண்டனங்களோடு இருக்காமல், வடக்குமாகாணத்தில் மட்டுமன்றி குறிப்பாக இலங்கையில் மட்டுமன்றி வடமாகாணத்திலும் இந்த ஜனநாயகம் என்பது கிடைக்க வேண்டும் என்ற வகையில் தொழிற்பாடுகள் இருக்க நாம் சர்வதேச சமூகத்தினை கேட்டுக் கொள்கின்றேன் என்றார்.

Related Posts