Ad Widget

ஜனாதிபதி அவர்கள் தாவுதி போரா ஆன்மீக தலைவரின் பண்புகளை நினைவுகூர்ந்தார்

MahindaRajapaksaஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தாவுதி போரா மக்களின் ஆன்மீக தலைவர் அதி வண. கலாநிதி ஸ்வெத்னா மொஹமட் புர்ஹனுதீன் (Syedna Mohammed Burhanuddin) அவர்களின் மரணம் தொடர்பாக அனுப்பியுள்ள அனுதாபச் செய்தியில் மனித வர்க்கத்திற்காக ஆற்றிய முன்னோடி சேவையை நினைவுகூர்ந்தார்.

கலாநிதி புர்ஹனுதீன் அவர்களின் புதல்வருக்கு அனுப்பி வைத்துள்ள செய்தியில் சனாதிபதி ராஜபக்ஷ அவர்கள் இலங்கை மக்களினதும் குறிப்பாக இலங்கையின் தாவுதி போரா மக்களினதும் ஆழ்ந்த அனுதாபத்தையும் கவலையையும் தெரிவித்துக்கொண்டார்

காலஞ்சென்ற வணக்கத்திற்குரிய கலாநிதி புர்ஹனுதீன் அவர்கள் லௌகீக மற்றும் மத கல்விக்கும் மக்களை நவீனமயமாக்குவதற்கும் சளைக்காது மேற்கொண்ட முயற்சியும் சேவையும் என்றும் நினைவுகூரப்படும் என்று ஜனாதிபதி ராஜபக்ஷ அவர்கள் தனது செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மனித வர்க்கத்திற்கு ஆற்றிய முன்னோடி சேவை ஆழமாக பதிந்திருக்கும். காலஞ்சென்ற ஆன்மீக தலைவர் இலங்கையின் போரா சமூகத்திற்கு ஆற்றிய மாபெரும் சேவையை நான் அறிவேன். காலஞ்சென்ற ஆன்மீகத் தலைவர் விட்டுச்சென்ற செய்தி சந்தேகமற எமக்கு ஆறுதல் அளிக்கும்.

தாவுதி போரா சமூகத்தின் 52வது தாய் அல் முத்லக் அவர்களான கலாநிதி புர்ஹனுதீன் அவர்கள் பலமுறை இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார். 2007ஆம் ஆண்டு அரச அழைப்பை ஏற்று இலங்கைக்கு வருகை தந்த அவர், ஜனாதிபதி ராஜபக்ஷ அவர்களையும் சந்தித்தார். அச்சந்திப்பின்போது இந்நாட்டுக்கு சமாதானத்தை ஏற்படுத்துவதற்கு அரசு எடுக்கின்ற முயற்சிக்கு போரா சமுகத்தின் பூரண ஒத்துழைப்பை தெரிவித்த கலாநிதி புர்ஹனுதீன் அவர்கள் போரா சமூகத்திற்காக ஜனாதிபதி நிதியத்திற்கு பத்து இலட்சம் ரூபா நன்கொடையாக வழங்கினார்.

ஜனாதிபதி ராஜபக்ஷ அவர்கள் கலாநிதி புர்ஹனுதீன் அவர்களின் தலைமையிலான தூதுக் குழுவினருக்கு இராப்போசண விருந்தளித்து ஆன்மீகத் தலைவரை கௌரவித்தார்.

Related Posts