Ad Widget

ஜனாதிபதியின் கிளிநொச்சி விஜயம் ஒரே பார்வையில்…

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்களை கிளிநொச்சியில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான குழுவினர் வரவேற்றனர்.

உலங்குவானூர்தியில் நேற்றய தினம் வந்திறங்கிய ஜனாதிபதி அவர்களை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அவர்கள் பொன்னாடை போர்த்தி மாலை அணிவித்து வரவேற்றார்.

md2

இக்குழுவில் வடக்கு மாகாண ஆளுநர் சந்திரசிறி ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான முருகேசு சந்திரகுமார், பாராளுமன்ற உறுப்பினர்களான சில்வேஸ்த்திரி அலென்ரின் (உதயன்) உனைஸ் பாரூக், வடக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவர் தவராசா ஆகியோர் உடனிருந்தனர்.

கிளிநொச்சி இந்துக்கல்லூரியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மகிந்தோதய தொழில்நுட்ப ஆய்வுகூடம் திறந்து வைப்பு

கிளிநொச்சி இந்துக்கல்லூரியில் மேற்படி நிகழ்வு நேற்றய தினம் (12) இடம்பெற்றது.

இதில் தொழில்நுட்பப் பாடநெறிகளை பாடவிதானங்களில் இணைத்துக் கொள்ளும் பொருட்டு 60 மில்லியன் ரூபா செலவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட இப்புதிய கட்டிடம் பாடசாலை சமூகத்திடம் கையளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் புதிய கட்டிடத்தை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்கள் உத்தியோகபூர்வ திறந்து வைத்து பாடசாலை சமூகத்திடம் கையளித்தார்.

இதில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்கள் உரைநிகழ்த்தினர்.

hindu1

hindu3

hindu5

ma1

காணி உறுதிப் பத்திரங்கள், தங்கநகைகள் ஜனாதிபதி பொதுமக்களிடம் கையளித்தார்.

வடமாகாணத்தில் காணி உறுதிப் பத்திரங்கள் இல்லாத ஒருதொகுதியினருக்கு காணி உறுதிப் பத்திரங்களையும் யுத்தகாலத்தில் புலிகளால் பறிமுதல் செய்யப்பட்ட தங்க நகைகள் தொலைந்து போனவர்களில் ஒருதொகுதியினருக்கு தங்கநகைகளையும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்கள் கையளித்தார்.

கிளிநொச்சி மத்திய கல்லூரியில் நேற்றய தினம் (12) இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்ட ஜனாதிபதி அவர்கள் இவற்றை கையளித்தார்.

இதன்பிரகாரம் வடமாகாணத்தில் 20 ஆயிரம் பேர் காணி உறுதிப்பத்திரங்களைப் பெற்றுக் கொள்ளும் அதேவேளை, 2352 பேர் தொலைந்து போன நகைகளையும் மீளப் பெற்றுக் கொண்டனர்.

land-gold-01

land-gold-02

land-gold-03

land-gold-04

இந்த நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வர்த்தக மற்றும் வாணிபத்துறை அமைச்சர் றிசாட் பதீயூதீன், சமூக சேவைகள் அமைச்சர் பிலீக்ஸ் பெரேரா உரையாற்றியதைதயடுத்து ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்கள் தமிழில் உரையாற்றினார்.

வடமாகாணத்தில் ஐந்து மாவட்டங்களையும் சேர்ந்த 20 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் கலந்து கொண்டனர்.

2015 பேருக்கு இழப்பீட்டுக் கொடுப்பனவு வழங்கிவைப்பு.

கற்றறிந்த பாடங்கள் நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசினை அமுல்படுத்தும் வகையில் 2015 பேருக்கு ஜனாதிபதி அவர்களினால் நேற்று இழப்பீடுகள் வழங்கப்பட்டன.

கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசினை அமுல்படுத்துவதன் மூலம் மக்களுக்கான நிவாரணம் வழங்கும் வகையில் இன்று வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த 2015 பேருக்கு இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் ஜனாதிபதி அதிமேதகு மகிந்தராஜபக்ச அவர்களினால் இழப்பீடுகள் வழங்கப்பட்டன. புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறு சீரமைப்பு அமைச்சின் ஏற்பாட்டில் புனர்வாழ்வு அதிகாரசபையினால் இதற்கென ஒதுக்கப்பட்ட சுமார் 100 மில்லியன் ரூபா நிதியின் மூலம் இவ் இழப்பீடுகள் வழங்கப்பட்டன.

வடக்கு மாகாணத்திற்குட்பட்ட கிளிநொச்சி முல்லைத்தீவு மன்னார் வவுனியா ஆகிய மாவட்டங்களைச்சேர்ந்த யுத்தத்தின்போது இழப்புக்களை எதிர்கொண்ட மக்கள் இவ் இழப்பீடுகளைப் பெற்றுக்கொண்டனர்.

dona

நேற்று காலை கிளிநொச்சியை வந்தடைந்த ஜனாதிபதி மகிந்தராஜபக்ச அவர்கள் இரணைமடுவில் பிரத்தியேகமாக ஏற்பாடு செய்யப்பட்ட இடமொன்றில் மக்களை சந்தித்து கலந்துரையாடியதன் பின் இவ் இழப்பீடுகளை வழங்கினார்.

அக்கராயன் வைத்தியசாலையின் குழந்தைகள் மற்றும் பெண்நோயியல் விடுதி திறப்பு.

ஐக்கிய அமெரிக்க பசுபிக் கட்டளைப்பீடத்தின் நிதியுதவியுடன் அக்கராயன்குளம் வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் பெண்நோயியல் விடுதி என்பன இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் ஜனாதிபதி அதிமேதகு மகிந்தராஜபக்ச அவர்களினால் திறந்துவைக்கப்பட்டு மக்களிடம் கையளிக்கப்பட்டது.

akkarayan

akkarayan2

முன்னதாக அக்கராயன்குளம் வைத்தியசாலையில் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள கட்டிடதொகுதிகளின் ஆரம்ப வேலைத்திட்டமும் அமைச்சர் றிசாட் பதியூதின், ஈ.பி;.டி.பி பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்றக்குழுக்களின் பிரதித்தலைவருமான மு.சந்திரகுமார். வடக்குமாகாண ஆளுநர் ஜி.எ சந்திரசிறி ஆகியோரால் அடிக்கல் நாட்டி ஆரம்பித்து வைக்கப்பட்டது.

கிளிநொச்சி மாவட்ட புதிய செயலகம் திறந்து வைப்பு

கிளிநொச்சி நகர்ப் பகுதியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மாவட்ட செயலகம் நேற்றய தினம் (12) உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் 210 மில்லியன் ரூபா நிதியுதவியுடன் இக்கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

முன்பதாக நிகழ்விற்கு வருகைதந்த ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினர் மங்கள வாத்தியம் சகிதம் பிரதான வாயிலுக்கு அழைத்து வரப்பட்டதைத் தொடர்ந்து புதிய கட்டிடத்தை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்கள் உத்தியோகபூர்வமாக திறந்து வைத்ததுடன், கட்டுமானப் பணிகளை பார்வையிட்ட அதேவேளை, துறைசார்ந்தோருடன் கலந்துரையாடியும் கேட்டறிந்து கொண்டார்.

இதனிடையே வடமாகாணத்தில் மாவட்டங்கள் தோறும் தெரிவுசெய்யப்பட்ட 55 ஆண், பெண் கிராமசேவையாளர்களுக்கு ஜனாதிபதி அவர்கள் மோட்டார் சைக்கிளை வழங்கி வைத்தார்.

kilinochchi-aga-office-1

kilinochchi-aga-office-2

தொடர்ந்து கிளிநொச்சி மாவட்டத்தின் வளத்தை எடுத்தியம்பும் வகையில் உருவாக்கப்பட்ட பாரம்பரிய வளங்கள் என்ற நூலை மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் ஜனாதிபதி அவர்களிடம் வழங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் பொதுநிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் ஜோன் செனவிரட்ன, ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான முருகேசு சந்திரகுமார், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஆகியோர் உரையாற்றினர்.

இதில் கிளிநொச்சி மாவட்டத்தில் யாழ்.பல்கலைக்கழகத்தின் விவசாய பொறியியல் பீடங்களை ஆரம்பித்து வைத்தமைக்கு நன்றி செலுத்தும் முகமாக துணைவேந்தர் செல்வி வசந்தி அரசரட்ணம் மற்றும் பீடாதிபதிகள், ஜனாதிபதி நினைவுப் பரிசில்களை வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts