Ad Widget

சென்.ஜோன்ஸ் அம்புலன்ஸ் சின்னத்தினை அகற்றிவிட்டு போராட்டம்

யாழ். போதனா வைத்தியசாலையின் தற்காலிக தொண்டர்கள் தமது மேலங்கியில் உள்ள சென்.ஜோன்ஸ் அம்புலன்ஸ் நிறுவனத்திற்குரிய சின்னத்தினை அகற்றி விட்டு இன்று பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

யாழ். போதனா வைத்தியசாலையின் தற்காலிக தொண்டர்கள் தங்களுக்கு நிரந்தர நியமனம் கோரி இன்று பதினொராம் நாளாக தொடர்ந்து பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் சென்.ஜோன்ஸ் அம்புலன்ஸ் யாழ். மாவட்ட ஆணையாளர் எஸ்.செல்வரஞ்சன் சென்.ஜோன்ஸ் அம்புலன்ஸ் தொண்டு நிறுவனம் என்பதனால் சென்.ஜோன்ஸ் அம்புலன்ஸினுடைய சின்னத்தினை அணிந்து தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட முடியாது எனத் தெரிவித்திருந்தார்.

அதற்கு தொண்டர் ஊழியர்கள் உங்கள் நிறுவனத்தில் பணிபுரிகின்றோம் என்பதனை எழுத்து மூலமாக உறுதிப்படுத்தி எமக்கு சமர்ப்பியுங்கள். அவ்வாறு சமர்ப்பிக்கும் பட்சத்தில் நாம் சின்னத்தினை நீக்குகின்றோம் என தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் இன்று சென்.ஜோன்ஸ் அம்புலன்ஸ் ஆணையாளரினால் தொண்டர்கள் கோரிய எழுத்து மூலமான உறுதிப்படுத்தல் வழங்கப்பட்டதினைத் தொடர்ந்து தொண்டர்கள் சென்.ஜோன்ஸ் அம்புலன்ஸ் சின்னத்தினை அகற்றிவிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இன்று மாலை மேற்படி தொண்டர்களை பாராம்பரி சிறிய கைத்தொழில் அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா சந்திக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts