Ad Widget

சூழலுக்கு தீங்கு ஏற்படுத்தாத உணவுற்பத்தி நடவடிக்கைகளை மேம்படுத்த நடவடிக்கை

S-Sivakumarசுற்றுப்புறச் சூழலுக்கு தீங்கு ஏற்படுத்தாத உணவுற்பத்தி நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கான பல்வேறு செயற்திட்டங்கள் வடமாகாணத்தில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வடமாகாண விவசாயத் திணைக்களத்தின் பணிப்பாளர் எஸ்.சிவகுமார் தெரிவித்துள்ளார்.

இன்று வெள்ளிக்கிழமை வடமாகாண சபையின் ஏற்பாட்டில் நடைபெற்ற மரடுகைத்திட்ட ஆரம்ப வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இதனை அவர் தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், ‘இவ்வாண்டு ‘யோசி உண் – சேமி’ என்ற கருப்பொள் இன்று உலகம் பூராகவும் உச்சரிக்கப்படுகின்றது. உலகத்தில் ஏழில் ஒரு பங்கு மக்கள் சாப்பாடு ஏதுமின்றி படுக்கைக்குச் செல்வதாகவும் 5 வயதிற்குட்பட்ட 20 ஆயிரம் பட்டினி காரணமாகவும் ஒவ்வொரு நாளும் இறப்பதாக உலக உணவு விவசாய ஸ்தாபன அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

எனவே உணவுப் பாதுகாப்பினை மேற்கொள்வதற்கு பல்வேறு வழிமுறைகளைக் கைக்கொள்ள வேண்டிய நிலையில் உள்ளோம். எமது மாகாணத்தில் மரக்கறியின் தேவை 87 ஆயிரம் மெற்றி;தொன்னாகவும் பழத்தின் தேவை 56 ஆயிரம் மெற்றித்தொன்னாகவும்; காணப்படுகின்றது.

இருந்தாலும் 112 ஆயிரம் மெற்றித்தொன் மரக்கறியும், 120 ஆயிரம் மெற்றித்தொன் பழவகையும் கிடைக்கின்றது. இவ்வாறு உற்பத்தி செய்யப்படுகின்ற உணவுப் பொருட்களில் ஏற்படும் இழப்புக்களைத் தடுப்பதற்காக விவாசாயிகளுக்கு பிளாஸ்ரிக் கூடைகள் வழங்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

அத்துடன் மரக்கறிகளால் ஏற்படுகின்ற செவீனத்தினை குறைப்பதற்காகவும் போசானை மட்டத்தினை மேம்படுத்துவதற்காகவும் திவிநெகும திட்டத்தின் கீழ் 88 ஆயிரம் பயனாளிகளுக்கு மரக்கறி விதைகள் வழங்க்பட்டு உணவு உற்பத்தி ஊக்குவிக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

Related Posts