சூளைமேடு கொலை வழக்கில் காணொலி காட்சி மூலம் ஆஜராகுவதற்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
இந்த வழக்கில் அவர், நேரில் ஆஜராகத் தேவையில்லை என்று நீதிமன்றம் குறிப்பிட்டது.
1986இல் சென்னை சூளைமேட்டில் திருநாவுக்கரசு என்பவர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மீது வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில் நேரில் ஆஜராகுமாறு சென்னை அமர்வு நீதிமன்றம் டக்ளஸ் தேவானந்தாவுக்கு உத்தரவிட்டது.
உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றம் டக்ளஸ் தேவானந்தா மேல்முறையீடு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.