Ad Widget

சூறாவளியாக மாற்றம்!

kattru-suravli-puyal-rain-malaiவங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்க நிலை தற்போது சூறாவளியாக உருவெடுத்து, யாழ்ப்பாணத்தில் இருந்து 330 கிலோமீற்றர் தொலைவில் கிழக்கு திசையில் நிலை கொண்டுள்ளது.

இந்த சூறாவளியானது இலங்கையில் இருந்து விலகி, இந்தியா நோக்கி நகர்வதாக காலநிலை அவதான நிலையத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் இந்த நிலைமையின் காரணமாக, மழை மற்றும் கடுமையான காற்றுடனான காலநிலை நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக பொத்துவில்லில் இருந்து மட்டக்களப்பு மற்றும் யாழ்ப்பாணம் ஊடாக புத்தளம் வரையான கடற்பகுதி, அதிக கொந்தளிப்பாகவும், அபாயகரமானதாகவும் காணப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts