Ad Widget

சு.க.வின் தலைவர் மஹிந்தவே

ஐக்கிய மக்கள் சுதந்திரக கூட்டமைப்பு மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே தற்போது காணப்படுகிறார் என தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

mahintha-thesappireya

10 தினங்களுக்கு முன்னர் அக்கட்சி தனக்கு அனுப்பிய கடிதத்தில் மஹிந்த ராஜபக்ஷவே கட்சியின் தலைவர் என்றும் அநுர பிரியதர்ஷன யாப்பாவே கட்சியின் செயலாளர் என்றும் குறிப்பிடப்பட்டிருந்ததாகவும் தேசப்பிரிய கூறினார்.

குறித்த தலைவர் பதவியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ஊடகங்களும் ஏனைய தரப்பினரும் கூறி வருகின்ற போதிலும், அது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு இன்னமும் விடுக்கப்படவில்லை என சுட்டிக்காட்டிய தேசப்பிரிய, தனக்கு இது தொடர்பில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கும் வரையில் ஐ.ம.சு.கூ மற்றும் சு.க ஆகிய கட்சிகளின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவே எனவும் கூறினார்.

Related Posts