இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள இந்திய வௌிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜூடன் மீனவர் பிரச்சினை தொடர்பில் கலந்துரையாடவுள்ளதாக, வடக்கு முதல்வர் சீ.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் 5ம், 6ம் திகதிகளில் சுஷ்மா சுவராஜ் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.
இதன்போது அவரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த தயாராகவுள்ளதாக வடக்கு முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.
மீனவர் பிரச்சினை தொடர்பில் இதன்போது கவனம் செலுத்தவுள்ளதாகவும், இது குறித்து வடக்கு மீனவர்கள் முன்வைத்த கோரிக்கை மற்றும் யோசனையை இந்திய வௌிவிவகார அமைச்சரிடம் வழங்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.