Ad Widget

சுயதொழில் பயனாளிகளின் தெரிவு இடம்பெறுகின்றது

யுனிசெவ் நிறுவன நிதி மூலமான சுயதொழில் கொடுப்பனவு வழங்குவதற்காக வடமாகாண சமூக சேவைகள் திணைக்களத்தால் பயனாளிகள் தெரிவு ஒவ்வொரு பிரதேச செயலகங்கள் ரீதியாகவும் முன்னெடுக்கப்படுவதாக சமூக சேவைகள் திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சுயதொழில் கொடுப்பனவுக்காக, பாடசாலை செல்லும் மாணவர்களை கொண்ட குடும்பங்கள் பயனாளிகளாக தெரிவு செய்யப்படுகின்றனர்.

சுயதொழிலின் தன்மைக்கேற்ப 30 ஆயிரம் ரூபாய் தொடக்கம் 40 ஆயிரம் ரூபாய் வரையில் சுயதொழில் கொடுப்பனவுகள் வழங்கப்படவுள்ளன.

இந்த சுயதொழில் கொடுப்பனவு மூலம், கால்நடை வளர்ப்பு, விவசாயம், சிறுகைத்தொழில் போன்ற சுயதொழில்களை செய்து குடும்பங்கள் தமது வாழ்வாதாரங்களை உயர்த்திக்கொள்ள முடியும்.

அத்துடன், குடும்பங்களிலுள்ள மாணவர்கள், பாடசாலையை விட்டு இடைவிலகும் நடவடிக்கையை தடுக்கவும் முடியும்.

இந்த சுயதொழில் கொடுப்பனவு கடந்த 2012 மற்றும் 2013ஆம் ஆண்டுகளிலும் வழங்கப்பட்டதுடன், கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களுக்கே இவை பெரும்பாலும் வழங்கப்பட்டுள்ளதாக அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

Related Posts