சுமாத்ரா நிலநடுக்கத்தினால் இலங்கைக்குப் பாதிப்பு இல்லை!

இந்தோனேஷியாவின் சுமாத்ரா தீவில் இன்று (13) ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் இலங்கைக்கு எந்தவிதப் பாதிப்பும் இல்லையென அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

சுமத்ரா தீவுக்கு மேற்கே 81 கி.மீ. தொலைவில் கடலுக்கடியில் சுமார் 67 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இலங்கையின் அனைத்து கடலோரப் பகுதிகளுக்கும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் சுனாமி எச்சரிக்கை விடுத்திருந்தது. ஆனாலும், இலங்கையில் சுனாமி ஏற்படக்கூடிய ஆபத்து இல்லை என இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் பின்னர் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts