தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தனது நாடாளுமன்றக் கடமைகளைவிட மாகாண சபைக்குள்ளேயே அதிக தலையீடுகளை மேற்கொள்வதாக ஈபிஆர்எல்எவ் கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இதனால், அவர் நடாளுமன்றப் பதவியைத் துறந்துவிட்டு, மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடுவதே பொருத்தமானது எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில், சுமந்திரன் தனக்கும், விக்னேஸ்வரனுக்குமிடையில் இருக்கும் கருத்து வேறுபாடுகள் காரணமாக, முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு பிரச்சனையை ஏற்படுத்தி முதலமைச்சர் பதவியைப் பறிக்கவேண்டுமென்பதற்காகவே இக்குழப்பங்களை ஏற்படுத்தி வருகின்றார்.
இதன்காரணமாக வட மாகாணத்தில் முதலமைச்சர், அவைத் தலைவர் மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் என அனைவரது செயற்பாடுகளிலும் சுமந்திரன் அழுத்தங்களைக் கொடுத்து வருகின்றார்.
விக்னேஸ்வரனிடமிருந்து முதலமைச்சர் பதவியைப் பறிக்கவேண்டுமென்பதற்காகவே அண்மையில் அவருக்கெதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை சுமந்திரனும் அவரது குழுவினரும் கொண்டுவந்தனர் எனவும் தெரிவித்தார்.