Ad Widget

சுன்னாக வாசிக்கு மரணதண்டனை விதிப்பு

judgement_court_pinaiசுன்னாகத்தை சேர்ந்த ஒருவருக்கு யாழ். மேல்நீதிமன்றம் 17ஆண்டுகளின் பின்னர் மரண தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.

ஒருவரை பொல்லால் அடித்து கொலை செய்தனர் என்ற வழக்கு 17ஆண்டுகளுக்கு பின்னர் இன்று யாழ். மேல் நீதிமன்றத்தில் நீதவான் அன்னலிங்கம் பிரேம்சங்கர் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டது. அதன்போதே மரண தண்டனை விதித்து தீர்ப்பினை வழங்கினார்.

கடந்த 1997 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 14ஆம் திகதி குடும்பத் தகராறு ஒன்றில் தலையில் பொல்லால் தாக்கி கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டில் தந்தை மற்றும் 2 மகன்களும் கைது செய்யப்பட்டிருந்தனர்.

அதனையடுத்து மல்லாகம் நீதவான் நீதிமன்றில் ஆரம்ப விசாரணைகள் இடம்பெற்று 2006ஆம் ஆண்டு சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு பாரப்படுத்தப்பட்டு மீண்டும் 2009 ஆம் ஆண்டு யாழ். மேல் நீதிமன்றத்திற்கு வழக்கு ஒப்படைக்கப்பட்டது.

17ஆண்டுகளின் பின்னர் குற்றஞ்சாட்டப்பட்ட இரண்டு மகன்களில் கொலை செய்தமைக்காக ஒருவருக்கு மரண தண்டனையும் இறந்தவரான சின்னத்துரை வடிவேலுவின் மகளைத் தாக்கினார் என மற்றையவருக்கு 5வருட கடூளிய சிறைத்தண்டனையும் வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கொலையாளிக்கு சம்பவம் இடம்பெற்ற காலத்தில் வயது 17 என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts