Ad Widget

சுன்னாகம் இளைஞர் கொலை வழக்கு யாழ்.மேல்நீதிமன்றுக்கு மாற்றம்!

சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் தடுப்பில் இருந்த சுமன் எனும் இளைஞன் சித்திரவதை செய்யப்பட்டபின் கொல்லப்பட்டு பின்னர் சடலத்தினை இரணைமடுக் குளத்தில் போடப்பட்ட வழக்கு நேற்று கிளிநொச்சி நீதவான் முன்னிலையில் விசாரணைக்கு எடுக்கப்பட்ட நிலையில் அதனை கிளிநொச்சி நீதவான் யாழ் மேல் நீதிமன்றிற்கு பாராப்படுத்தியுள்ளார்.

சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் தடுப்பில் இருந்த இளைஞர் சித்திரவதை செய்யப்பட்ட பின் கொல்லப்பட்டு பின்னர் சடலத்தினை இரணைமடுக் குளத்தில் போடப்பட்ட வழக்கு நேற்று கிளிநொச்சி நீதவான் முன்னிலையில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது. ஐந்து சந்தேக நபர்களும் நேற்றய தினம் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

குற்றப்புலனாய்வுப் பிரிவினர் மரண அறிக்கையினை தாக்கல் செய்தனர். இதனடிப்படையில் உயிரிழந்த இளைஞனின் சடலத்தில் 16 வெளிக்காயங்களும் 8 உள்காயங்களும் காணப்பட்டதாக மரண அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

சந்தேக நபர்கள் ஐவரையும் எதிர்வரும் 8ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்ட நீதவான் ஆனந்தராஜா. வழக்கினை யாழ் மேல்நீதிமன்றதிற்கு பாரப்படுத்துவதாகவும் தெரிவித்தார்.

Related Posts