சுட்டெரிக்கும் வெயிலால் பள்ளிகளுக்கு விடுமுறை: தீவிரமடையும் வெப்ப அலை!

பிரான்ஸ் நாட்டின் பாதிக்கும் மேற்பட்ட பகுதிகளில் சிவப்பு வெப்ப எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் பாடசாலைகள் மூடப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தீவிரமடைந்து வரும் வெப்ப அலை காரணமாக பிரான்சின் பாதிக்கும் மேற்பட்ட பகுதிகளுக்கு சிவப்பு வெப்ப எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வானிலை முன்னறிவிப்பாளரான மெட்டியோ-பிரான்ஸ் தகவலின்படி, மேற்கு பிரான்சின் சில பகுதிகளில் நேற்று அதிகபட்ச வெப்பநிலை 40 பாகை செல்சியஸுக்கும் மேற்பட்டதாக இருக்கும் என்றும், போர்டோவில் வெப்பநிலை 42 பாகை செல்சியஸை எட்டும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.

கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில், சுமார் 845 பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன. 1,800 பாடசாலை மாணவர்கள் வகுப்புகளை முன்கூட்டியே நிறைவு செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சுட்டெரிக்கும் வெப்பத்திற்கு மத்தியில், பத்து இலட்சத்திற்கும் அதிகமான உயர்நிலைப் பாடசாலை மாணவர்கள் இளங்கலைப் பட்டத்திற்கான வாய்மொழி இறுதி பரீட்சைகளை எழுத உள்ளனர்.

இதேவேளை வார இறுதியில் 13 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்ததைத் தொடர்ந்து, ஏரிகள் மற்றும் ஆறுகள் போன்ற மேற்பார்வையற்ற பகுதிகளில் சென்று குளிர்ச்சியடைய முயற்சிக்க வேண்டாம் என்று பிரெஞ்சு அரசாங்கம் மக்களை எச்சரித்துள்ளது.

Related Posts