Ad Widget

சுகாதார ஊழியர் வெற்றிடம் முகாமைத்துவ சேவை திணைக்களம் காரணம்

வடமாகாணத்தில் தற்காலிகமாக பணியாற்றும் சுகாதார தொண்டர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படாமைக்கு முகாமைத்துவ சேவைகள் திணைக்களமே காரணம் என வடமாகாண சுகாதார அமைச்சர் ப. சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.

சுகாதார தொண்டர்களின் போராட்டம் தொடர்பாக கருத்து தெரிவித்த போதே வடமாகாண சுகாதார அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

வடமாகாண சுகாதார தொண்டர்களின் நியமனம் தொடர்பாக ஊடகங்களில் மாறுபட்ட கருத்துக்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.

வட மாகாணத்தில் சுகாதார தொண்டர்கள் நீண்ட காலமாக வேறு வேறு காலத்தில் தொண்டர்களாக பணியாற்றியுள்ளனர்.

2014 ஆம் ஆண்டு இறுதியில் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் வெளியிடப்பட்ட 25.2014 / 25.1.2014 என்ற சுற்றுநிருபத்தின் அடிப்படையில் சுகாதார திணைக்களம் மற்றும் ஏனைய திணைக்களங்களில் ஒப்பந்த அடிப்படையிலோ அல்லது தற்காலிக அடிப்படையிலோ பணியாற்றியவர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கக் கூடிய சந்தர்ப்பம் கிடைத்தது.

எனினும் எஞ்சிய சுகாதார தொண்டர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்க கடந்த ஒரு வருடங்களாக முகாமைத்துவ சேவைகள் திணைக்களம் அனுமதி வழங்க மறுப்பதாக வடமாகாண சுகாதார அமைச்சர் குறிப்பிட்டார்.

Related Posts