Ad Widget

சுகாதாரமற்ற உணவு விநியோகிக்கப்பட்டமைக்கு ஆளுநர் ராகவன் மக்களிடம் மன்னிப்பு கோரியுள்ளார்

பாமர மக்களை கடவுளாக மதிப்பவன் என்ற வகையில் கிளிநொச்சியில் சுகாதாரமற்ற உணவு விநியோகிக்கப்பட்டமைக்கு வடக்கு ஆளுநர் சுரேன் ராகவன் மக்களிடம் மன்னிப்பு கோரியுள்ளார்.

வடக்கு ஆளுநரின் மக்கள் சந்திப்பு நேற்று (புதன்கிழமை) கிளிநொச்சியில் நடைபெற்றது. இதன்போது, கொள்வனவு செய்யப்பட்ட மதிய உணவில் புழு காணப்பட்டுள்ளது.

குறித்த விடயம் தொடர்பாக சுகாதார அதிகாரிகளுக்கு உடனடியாக அறிவிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனையடுத்து குறித்த உணவகத்தை உடனடியாக மூடுமாறு கிளிநொச்சி நீதவான் உத்தரவிட்டுள்ளார். ஆனால், நீதிமன்ற உத்தரவையும் பொருட்படுத்தாது குறித்த உணவகம் இரவுவரை திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இதனை அவதானித்த ஆளுநர் அதிரடியாக நடவடிக்கை எடுத்து இரவே கடையை மூடுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளார்.

இந்நிலையில், ஜனநாயகத்தையும், நீதியையும் மதிப்பவன் என்ற வகையில் நீதியை மதிக்க தவறிய குறித்த உணவகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு கோரவுள்ளதாகவும் வடக்கு ஆளுநர் தெரிவித்துள்ளார்.

Related Posts