Ad Widget

சீன நிறுவனத்தின் அட்டை பண்ணை தொழிலாளர்களுடன் கலந்துபேசியே பரீட்சார்த்தமாக நடத்தப்படுகின்றது – அமைச்சர் டக்ளஸ்

கிளிநொச்சி கௌதாரி முனையில் அமைந்துள்ள சீன நிறுவனத்தின் கடலட்டை பண்ணை அப்பகுதி கடற்தொழிலாளர்களுடன் கலந்துபேசி பரீட்சார்த்தமாக நடத்தப்படுவாதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்டத்திற்கு நேற்று(செவ்வாய்கிழமை) விஜயம் மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பல்வேறு கலந்துரையாடல்களில் கலந்து கொண்டு இறுதியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், “ஏற்கெனவே அரியாலையில் நல்லாட்சி அரசாங்கத்தினால் கடலட்டை குஞ்சு உற்பத்தி நிலையம் ஒன்றை அமைப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டிருக்கின்றது.

அந்த அனுமதியின் அடிப்படையில் கௌதாரிமுனை பகுதியில் அப்பகுதி மீனவ சங்கங்களுடன் கலந்துரையாடி பரீட்சார்த்தமாக குறித்த அட்டை பண்ணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இது தொடர்பாக நேரடியாகச் சென்று பார்வையிடவுள்ளேன்.

கிளிநொச்சி அறிவியல் நகரில் அமைந்துள்ள யாழ்.பல்கலைக்கழக வளாகத்திற்கு தேவையான தண்ணீரை பெற்றுக் கொள்வதற்காக அருகிலேயே இருக்கின்ற புலி குளத்தை புனரமைப்பது தொடர்பிலும் விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.

அத்துடன் கிளிநொச்சி மாவட்டத்தில் வனவள திணைக்களம் மற்றும் வனஜீவராசிகள் திணைக்களத்தின் கீழ் கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகளை விடுவித்தல், கால்நடைகளுக்கான மேய்ச்சல் தரைகள் மற்றும் விவசாய நிலங்களை விடுவித்தல் போன்ற பல்வேறு வடயங்கள் தொடர்பிலும் கிளிநொச்சி கண்டாவளை பிரதேசத்தில் ஆறுமுகம் திட்டத்தினால் ஏற்படும் பாதக, சாதக நிலைமைகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளது.“ எனக் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts