Ad Widget

சீனி மற்றும் கிழங்கிற்கான இறக்குமதி வரி அதிகரிப்பு

இறக்குமதி செய்யப்படும் சீனி மற்றும் கிழங்கிற்கான இறக்குமதி வரி அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதன்படி 1 கிலோ கிராம் சீனிக்கான வரி 12 ரூபாவினாலும் 1 கிலோ கிராம் உருளை கிழங்கிற்கான வரி 10 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

என்றாலும் சீனியின் சந்தை விலைகளில் மாற்றம் ஏற்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வரி அதிகரிப்பு செப்டெம்பர் மாதம் 8ம் திகதி நள்ளிரவு முதல் அமுலுக்கு வருவதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

உள்ளூர் உற்பத்திகளை ஊக்கப்படுத்தும் வகையில் இறக்குமதி செய்யப்படும் உருளைக் கிழங்குகளின் வரி அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

Related Posts