யாழ்ப்பாணம் பண்ணை பகுதியில் அமைக்கப்பட்ட சிறுவர் மற்றும் மகளிர் விவகாரங்கள் தொடர்பான பொலிஸ் நிலையம், சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சர் சந்திராணி பண்டார, சிறுவர் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் ஆகியோரால் வியாழக்கிழமை (01) மாலை திறந்து வைக்கப்பட்டது.
இந்த கட்டடம் அமைப்பதற்கு சிறுவர் மற்றும் விவகார அமைச்சு 5 மில்லியன் ரூபாய் நிதியை ஒதுக்கி, இதற்கான அடிக்கல் கடந்த 2014 ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 3ஆம் திகதி நாட்டப்பட்டது.
யாழ்ப்பாணப் பொலிஸ் நிலையத்தின் கீழ் இயங்கி வந்த சிறுவர் மற்றும் மகளிர் பொலிஸ் பிரிவு இனிவருங்காலத்தில் தனியாக செயற்படவுள்ளது.
