Ad Widget

சிறுவர்களுக்கு நாடகம் தொடர்பான வழிகாட்டல் கருத்தரங்கு

சிறுவர்களுக்கு நாடகம் தொடர்பான வழிகாட்டல் கருத்தரங்கு ஒன்று கடந்த வெள்ளிக்கிழமை (26) யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ரூபினி வரதலிங்கம் தலைமையில் இடம்பெற்றது.

children-drama

சிறுவர் அபிவிருத்தி மற்றும் மகளிர் விவகார அமைச்சின் தேசிய நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களத்தால் சிறுவர் தினத்தை முன்னிட்டு சிறுவர் கழகங்களிடையே நடாத்தப்பட உள்ள நாடக போட்டியில் கலந்து கொள்ள உள்ள சிறுவர்களுக்கான வழிகாட்டல் கருத்தரங்கே இடம்பெற்றதாகும்.

இந்த நிகழ்வில் குறு நாடகத்தின் பண்புகள் அதன் நெறிகள் ,விழுமியங்கள் என்பன பற்றி சிறுவர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டதுடன் செயற்பாட்டு ரீதியில் சிறுவர்களை நாடகங்கள் நடிக்கச் செய்து அவற்றிற்கான கருத்துக்களும் வளவாளர்களால் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்வில் கலாநிதி குழந்தை சண்முகலிங்கம்(நாடக அரங்குக் கல்லூரி யாழ்ப்பாணம்), யாழ் பல்கலைக்கழக ஊடக வளங்கள் மற்றும் பயிற்சி நிலைய பணிப்பாளர் தேவானந்த், மாவட்ட சிறுவர் உரிமை மேம்பாட்டு ஒருங்கிணைப்பாளர் மனோகரன் மற்றும் யாழ் மாவட்டத்தின் பதினைந்து பிரதேச செயலகங்க பிரிவுகளிலும் இடம்பெற்ற நாடக போட்டிகளில் முதலிடம் பெற்ற பதினைந்து சிறுவர் குழுக்கள் கலந்து கொண்டனர்.

Related Posts