Ad Widget

சிறுவர்களின் எதிர்காலம் ஒளிபெற்றால் சமாதானம் நிலைபெறும்: ஹத்துருசிங்க

mahinda_hathurusingheஇந்த மண்ணில் வாழும் சிறுவர்களின் எதிர்காலம் ஒளிமயமானதாக மாறும் போது நாட்டில் சமாதானம் நிலைத்திருக்கும் என யாழ். மாவட்ட படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க தெரிவித்துள்ளார்.

வறுமைக்கோட்டு உட்பட்ட 245 மாணவர்களுக்கான புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இந்த வைபவம், யாழ். கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரியில் அண்மையில் நடைபெற்றது.

அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது,

பொதுமக்கள் கடந்த காலங்களில் அனுபவித்த துன்ப துயரங்களை மறந்துவிடக்கூடாது. எதிர் காலத்தில் நாட்டை முன்னேற்றும் கடமை இந்த சிறார்களிடமே உள்ளது.

மாணவர்களுடைய கல்விச் செயற்பாடுகளுக்கு தம்மால் இயன்ற உதவிகளை படையினர் தற்போது வழங்கி அவர்களின் கல்வி நடவடிக்கைகளை முன்னகர்த்தும் செயற்பாட்டில் ஈடுபட்டு வருகின்றனர்.

யாழ்ப்பாணத்தில் 1981 ஆம் ஆண்டினைவிட 2009 ஆம் ஆண்டின் பின் அதிகளவான அபிவிருத்தி நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன.

யாழ். மாவட்ட மாணவர்களின் கல்வி மட்டமானது யுத்தத்தின் பின்னர் ஏனைய மாவட்டங்களை விட முன்னேற்றம் அடைந்து வருகின்றதுடன், கணித பாடத்தில் யாழ். மாவட்டமே முன்னிலையில் காணப்படுகின்றது.

கடந்த கால யுத்தத்தினால் அழிவடைந்த பாடசாலைக் கட்டிடங்கள் அனைத்தும் ஜனாதிபதியின் வழிகாட்டலில் நவீனமுறையில் மீள்நிர்மாணம் செய்யப்படுகின்றன.

முன்னைய காலத்தில் குப்பி விளங்கில் கல்விகற்ற பாடசாலை மாணவர்கள், இன்று மின்சார ஒளியில் கல்விகற்கின்ற வாய்ப்பினைப் பெற்றுள்ளனர் என அவர் மேலும் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி

படையினரால் மாணவர் ஊக்குவிப்பு புலமைப்பரிசில்

Related Posts