சிறுவனின் கையில் ஏறிய கனரக வாகனம்

நல்லூர் பகுதியில் வீதியில் சென்றுகொண்டிருந்த 3 வயதுச் சிறுவனை மோதிய கனரக வாகனம், சிறுவனின் கைகளில் ஏறிச் சென்றதில் படுகாயமடைந்த சிறுவன் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இருபாலையைச் சேர்ந்த சசிக்குமார் கயூட்சனன் என்ற சிறுவனே படுகாயமடைந்தார்.

சம்பவம் தொடர்பான விசாரணைகளை யாழ்ப்பாணப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts