Ad Widget

சிறுநீரக நோயாளிகளுக்கு உதவிக் கொடுப்பனவுகள்

cash-money-paymentவடக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களம் வடக்கு மாகாணத்தில் சிறு நீரக நோய்த் தாக்கத்துக்கு உள்ளாகி இருப்பவர்களுக்கு மாதாந்தம் 500 ரூபா வீதம் சீறுநீரக நோயாளிகளுக்கான கொடுப்பனவாக வழங்குவதற்கு தீர்மானித்துள்ளது.

புதிய தீர்மானத்தின் பிரகாரம் வடக்கு மாகாணத்தில் உள்ள ஐந்து மாவட்டங்களிலும் நோய்த் தாக்கத்துக்கு உள்ளானவர்களிடம் இருந்து பிரதேச செயலர் மற்றும் பிரதேச செயலக சமூக சேவை அலுவலர்கள் விவரங்களை திரட்டுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கான மாதாந்த உதவிக் கொடுப்பனவு வழங்கல் என்ற தலைப்பில் (02/2013) சுற்றறிக்கையை வடக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களப் பணிப்பாளர் அனுப்பி வைத்துள்ளார்.

மாற்றுச் சிறுநீரகம் பொருத்தப்பட்ட நோயாளர்கள், மாற்றுச் சிறுநீரகம் பொருத்துவதற்காக அடையாளம் காணப்பட்ட நோயாளர்கள், சிறுநீரக நோய் நிலையில் 5 ஆவது நோய் நிலையில் இருக்கும் நோயாளர்கள் சிறு நீரக நோய் நிலையில 4 ஆவது நிலையில் இருக்கும் நோயாளர்கள், சிறுநீரகம் செயலிழந்த நோயாளர்கள் ஆகியோர் இந்த உதவித் தொகை கோரி விண்ணப்பிக்கலாம்.

இவர்களின் மாதாந்த வருமானம் நான்காயிரம் ரூபாவுக்கு குறைவானது என்பதை கிராம அலுவலர் உறுதிப்படுத்துவதுடன்,
நோயின் பாதிப்பு நிலை தொடர்பாக சிறுநீரக நோய் தொடர்பான வைத்திய நிபுணர், உடல் சம்பந்தப்பட்ட நோய் தொடர்பான வைத்திய நிபுணர், சிறுவர் நோய் தொடர்பான வைத்திய நிபுணர் ஆகியவர்களில் ஒருவர் உறுதிப்படுத்தியிருக்க வேண்டும்.

கிராம அலுவலர் ஊடாக பிரதேச செயலக சமூக சேவை அலுவலரிடம் படிவங்களை பெற்று உரிய முறையில் விண்ணப்பிக்க வேண்டும். நோயாளருக்கான கொடுப்பனவு மாதாந்தம் 500 ரூபா வீதம் சம்பந்தப்பட்டவர்கள் கொடுப்பனவை பெற விரும்பும் அஞ்சல் அலுவலகம் ஊடாக வழங்கப்பட வுள்ளன.

Related Posts